கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைத் தீர்மானங்கள்
கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டம் சென்ற22.04.2013ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்அப்துல் மஜீட் அவர்களின் தலமையில் நடைபெற்றஅமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதீர்மானங்களை கிழக்கு மாகாண அமைச்சரவையின்பேச்சாளரும், வீதி அபிவிருத்தி அமைச்சருமானஎம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள்பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிட்டார்.அத்தீர்மானங்கள் பின்வருமாறு.
01. அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் ஆசிரிய வெற்றிடங்களைநிரப்புதல்.
அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பொத்துவில் பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 97 ஆசிரிய வெற்றிடங்களும்;, அட்டாளைச்சேனை பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில்31 ஆசிரிய வெற்றிடங்களும், அக்கரைப்பற்று பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 5ஆசிரிய வெற்றிடங்களும்; மொத்தமாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 133 ஆசிரியவெற்றிடங்கள் நீண்ட காலமாக நிலவி வருவதால் பல பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிபாதிப்படைந்துள்ளது. இவ் ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பாக, பல பாடசாலைகள் மூடப்பட்டு,ஆர்ப்பாட்டங்கள் நடாத்தி குறித்த பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிவருகின்ற ஆசிரியர்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யாமல், குறிப்பாக பொத்துவில் கல்விக் கோட்டத்தில் தமதுபிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர்கள் ஒன்றிணைந்துகோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் வழமையான கல்விநடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன.
எனவே, அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் நிலவுகின்ற 133 ஆசிரிய வெற்றிடங்களைகிழக்கு மாகாணசபையினால் புதிதாக வழங்கப்படவுள்ள ஆசிரிய நியமனத்தின் போது இவ்ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனகிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம்;மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டஅமைச்சரவை பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை விரைவாக கிழக்குமாகாணசபையினால் புதிதாக வழங்கப்படவுள்ள ஆசிரிய நியமனத்தின் போது அக்கரைப்பற்றுவலயக்கல்வி பாடசாலைகளில் நிலவி வருகின்ற ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியது.
02. சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் கிழக்கு மாகாணமுதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் விசேட ஏற்பாடு
திருகோணமலை சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் கடந்தகாலங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு சம்பூர் பிரதேச மக்களை மீளக்குடியமர்த்தும்பணிகளும் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இன்றுவரை அந்த மக்களின் உண்மையானபிரச்சினைகளுக்கு நடைமுறை சாத்தியமான தீர்வு ஆராயப்படாமல் உள்ளதால்இப்பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்களின் பிரதி நிதிகளும், பொது மக்களும் தங்களுக்கு தீர்வுகிடைக்கவில்லை என தொடர்ச்சியாக பத்திரிகைகளிலும் கிழக்கு மாகாண சபையிலும் பேசிவருவதுடன் பத்திரிகையாளர் மாநாடுகளிலும் சில பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக கிழக்குமாகாணசபையினால் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விபரங்கள் பற்றியும் கேட்கின்றனர்.
சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சினையை தீர்த்து நடைமுறைபடுத்தக்கூடிய தீர்வுகளைசிந்திக்காமல் சிலர் சம்பூர் மக்களின் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக மாற்றிவருவதுடன் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும் மேற்கொண்டுவருகின்றனர்.
எனவே, சம்பூர் மக்களின் உண்மைக்குண்மையான பிரச்சினைகள் குறித்து அப்பிரதேசமக்களையும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய உயர் அதிகாரிகளையும் கிழக்கு மாகாணமுதலமைச்சர் அழைத்து நடைமுறை சாத்தியமான தீர்வுகள் குறித்து விசேட நடவடிக்கைமேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும்நிர்மாணமும், கிராமிய மின்சாரம்; மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைஅவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவைசம்பூர் மக்களின் பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்அவர்களின் தலைமையிலான விசேட கூட்டம் ஒன்றை கூட்டி, பாதுகாப்பு உயர் அதிகாரிகள்,சம்பூர் மக்களினுடைய பிரதி நிதிகள், இப்பிரச்சினைகள் தொடர்பாக ஏனைய அதிகாரிகளையும்அழைத்து நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்;கான அனுமதியினைஅமைச்சரவை வழங்கியது
03. அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக ஜனாப் ஏ.பி.எம்.சரீபை நியமிக்கதீர்மானம்
அம்பாறை மாவட்டத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி கடந்த 02.07.2012ம்திகதியில் இருந்து வெற்றிடமாக உள்ளது.
இவ் வெற்றிடத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் சேவை மூப்புடன் 01.08.1979ம் முதல் கிராமஅபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் பெற்று 01.01.2007 திகதி முதல் தரம் ஒன்று பதவியில்உள்ள கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.வீ.எம்.சரீப் என்பவர் இதுகாலவரையில் சிறப்பாககடமை புரிந்து வருவதனால் அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராகநியமனம் செய்வதற்கு கடந்த மாகாண சபைக் காலத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது வரைகாலமும் எதுவித ஒழுக்காற்று விசாரணை அல்லது தண்டனைக்குரிய குற்றம் அல்லது காலம்தாழ்த்தி வைக்கப்பட்ட குற்றச்செயல்கள் எதுவும் இவரால் இடம் பெறவில்லை.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம், தமிழ், சிங்கள ஆகிய மூவின மக்கள் வாழ்வதால் மூன்றுமொழிகளிலும் கடமையாற்றக்கூடிய தகுதியுடைய ஏ.வீ.எம்.சரீப் என்பவரை அம்பாறை மாவட்டகிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்குமாறு கிழக்கு மாகாண வீதிஅபிவிருத்தி,நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம்; மற்றும் நீர் வழங்கல்அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம்தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை ஜனாப். ஏ.வீ.எம். சரீபை அம்பாறை மாவட்ட கிராமஅபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் செய்வதற்கான அனுமதியினை அமைச்சரவைவழங்கியது.
கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்களின்; பிரத்தியோகச் செயலாளர்கள், இணைப்புச்செயலாளர்கள், பொதுசன தொடர்பு அதிகாரி மற்றும் பிரத்தியோக உதவியாளர்கள்ஆகியோருக்கு ரூபா 5000ஃஸ்ரீ வினை விசேட கொடுப்பனவாக வழங்க வேண்டுமென கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம்; மற்றும்நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை 5000ஃஸ்ரீ வினை மாதாந்த விசேட பிராயணக்கொடுப்பனவை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கியது.
05. மக்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிவரும் சம்மாந்துறை அல்-ஹம்றா பாடசாலையோடுஇணைந்த காணியினை ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலை அமைப்பதற்கு அங்கீகாரம்கோருதல்.
70000 இற்கு மேற்பட்ட சனத்தொகை வாழும் சம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுள்வேத மாவட்டவைத்தியசாலையினை நிர்மாணிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்பொருத்தமான காணி இன்மையினால் ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலை அமைக்கும்நடவடிக்கை தடைப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பொது மக்களின் ஆக்கிரமிப்பிற்குஉள்ளாகிவரும் சம்மாந்துறை அல்-ஹம்றா பாடசாலையோடு இணைந்த காணியினை சகலபுத்தி ஜீவிகளும், இப் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இப் பாடசாலைக் காணியினைஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்க சிபாரிசு செய்துள்ளனர்.
எனவே, இக் குறித்த காணியினை சம்மாந்துறை ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலைஅமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களினால்சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை கிழக்குமாகாண கல்வி அமைச்சின் சிபாரிசினை பெற்று குறித்த காணியினை ஆயுள்வேத மாவட்டவைத்தியசாலையை அமைப்பதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியது.
06. கிழக்கு மாகாண உதவி சட்ட உத்தியோகத்தர் ஜனாபா. அபிலா அனஸின் சேவைக்காலத்தைநீடித்தல்
கிழக்கு மாகாண சட்டப்பிரிவில் உதவி சட்ட உத்தியோகத்தராக கடமைபுரியும் ஜனாபா. அபிலாஅனஸ் அவர்களின் சேவைக்காலத்தினை மேலும் 1 வருட காலம் நீடிக்க வேண்டுமென கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப்பத்திரத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை உதவி சட்ட உத்தியோகத்தர் ஜனாபா அபிலாஅனஸின் சேவைக்காலத்தை மேலும் 1 வருட காலம் நீடிப்பதற்கான அனுமதியினைஅமைச்சரவை வழங்கியது.
Comments
Post a Comment