மஹசென்" சூறாவளி விலகிச் செல்கின்றது!
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த மஹசென் சூறாவளி நாட்டிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பெய்துவரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- மட்டக்களப்பு- அம்பாறை- திருகோணமலை- மாத்தளை- கண்டி- நுவரெலியா- புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்துவருகின்றது.
கடும் காற்றினால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் வெள்ளநீர் தேங்கி நிற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment