Posts

கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிகளிவாசல்கள் நிர்வாகத்தினால் 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி பகிர்ந்தளிப்பு

Image
கொரோனா வைரஸ் தொற்று  அசாதாரண   நிலமையின் காரணமாக கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிகளிவாசல்கள் நிர்வாகத்தினால் 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி பகிர்ந்தளிக்கு வைபவம் கல்முனை அனைத்து  பள்ளிகளிவாசல்கள்  சம்மேளனத்தின்  தலைவர்  டாக்டர்  எஸ்.எம்.ஏ. அஸிஸ் தலைமையில் இன்று  09 முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.  கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்  முன்னிலையில்  நடை பெற்ற  நிகழ்வில் மேற்படி நிவாரண தொகையினை கல்முனை பகுதியில் உள்ள பள்ளிவாசல்களினூடாக குறித்த பயனாளிகளின் வீடுகளிற்கு தலா 2000 ரூபா பணம் வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டு ரொக்கப்பணம் கையளிக்கப்பட்டது. இதன் பிரகாரம் கல்முனை பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி உதவி பெறாத தொழில்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மற்றும் வறுமை குடும்பங்களை இனங்கண்டு இன்றய  தினமே இப்பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்று முதல் நாளாந்தம் அனைத்து மருந்தகங்களும் திறந்து வைப்பு

Image
மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இன்று முதல் சகல தினங்களிலும் திறந்திருக்கும் என அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று பிற்பகல் அளவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் மருந்தகங்களின் முன் குழுமியிருந்ததை அவதானிக்க முடிந்தது. தற்போதைய நிலைமையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களின் ஒரு அங்கமாக நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களை இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்குமாறு ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - இருவர் பூரண சுகம்

Image
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 49 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை இன்றைய தினம் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 190 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, தற்போது 133 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். ,

மாவட்டங்களில் இருந்து வெளியேறும் நபர்களுக்கான அறிவித்தல்

Image
ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மாவட்ட எல்லையை கடக்கும் நபர்கள் நிச்சயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பாடுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி உதவிக்கு காத்திருப்போருக்கு நிதி உதவி

Image
ஜனாதிபதியின் திட்டங்களில் ஒன்றான கொரோனா வைரஸ் (Covid 19) தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்துள்ள சமுர்த்தி பெறுவதற்கு தகுதியிருந்தும் கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அரசினால் ஒரு தடவை வழங்கப்படும் 5000/- கொடுப்பனவை வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (08) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது பிரதேச செயலாளர் எம்.நஸீர் ,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.நஜீம் ,வங்கி முகாமையாளர் மோசஸ் புவிராஜ், அத்துடன் னைபள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உட்பட பல அதிகாரிகளும் கலந்துகொண்டு 5000/- கொடுப்பனவை கல்முனை இஸ்லாமாபாத் மக்களுக்கு வழங்கி வைத்தனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி

Image
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது. 48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரை 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Image
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரியங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

Image
கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது. குறித்த மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் இதுவரையில் 6பேர் உயிரிழப்பு

Image
இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் இதுவரையில் 6பேர் உயிரிழந்துள்ளனர் இலங்கையில் இடம்பெற்ற 6 ஆவது கொரோனா வைரசு நோயாளியின் மரணம் சற்று முன்னர் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று காலை உறுதி செய்தார். 80 வயதைக்கொண்ட ஆண் நபரான இந்த நோயாளி IDH வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

உலகில் கொரோனாவால் 1,347,803 பேர் பாதிப்பு - 74,807 பேர் உயிரிழப்பு!

Image
April 7, 2020  சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 803 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 74 ஆயிரத்து 807 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 77 ஆயிரத்து 402 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 574 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47 ஆயிரத்து 249 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உலக அளவில் இத்தாலியில் அதிக அளவாக 16,523 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. அங்கு 13,341 பேர் இறந்துள்ளனர். நோய்த்தாக்கம் அதிகம் உள்ள அமெரிக்கா...

கொரோனா வைரசு பரவுவதை தடுக்க பின்பற்ற வேண்டியவை

Image

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

Image
கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு ,  கம்பஹா ,  களுத்துறை ,  புத்தளம் ,  கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும்  இன்று காலை  6.00  மணிக்கு தளர்த்தப்பட் ட  ஊரடங்கு சட்டம் பிற்பகல்  02.00  மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்ப ட்டது . இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்ப ட்ட  ஊரடங்கு சட்டம்  ஏப்ரல் 09 வியாழன்  காலை  6.00  மணிக்கு தளர்த்தப்பட் டு அன்றைய தினம் பிற்பகல் 04 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். இன்று  ஏப்ரல்  06  ஆம் திகதி திங்கள் முதல்  10  ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக...

ஏப்ரல் 9ஆம் திகதி காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு ஊரடங்கு

Image
இன்று  காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட  ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளுக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 9ஆம் திகதி  காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு  மாலை 4.00  ஊரடங்கு சட்டம்  தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Image
இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 174 அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 29 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நாட்டு கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Image
நாட்டில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரையில் 171பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 137 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 29 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 275 க்கும் அதிகமானோர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

Image
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று (05) பிற்பகல் 4.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 167 இலிருந்து 170 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒருவர் அடையாளம்; இதுவரை கொரோனா தொற்றியோர் 167

Image
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 166 இலிருந்து 167 ஆக அதிகரித்துள்ளது.

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு

Image
நாளை ஏப்ரல் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான வாராந்த வேலைக்கால வாரம் அரச தனியார் ஆகிய இரண்டுபிரிவினருக்கும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். கடந்த வாரமும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும்;. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக் காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

குருநாகல் வைத்தியசாலையில் தீ விபத்து

Image
குருநாகல் ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். வைத்தியசாலையின் மருந்து பொருட்கள் வைத்திருக்கும் வைத்துள்ள களஞ்சியசாலையில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நோய் அறிகுறிகள் தென்பட்டால் சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுங்கள்

Image
கொவிட் - 19 தொற்றுக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை மேலும் விஸ்தரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.

நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்

Image
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்ந்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். குறித்த பகுதிகளுக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கல்வியற்கல்லூரி மாணவ ஆசிரியர்கள் தொற்று நோய் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் அறிவிக்குமாறு கோருகிறார் யாழ் கல்வியற்கல்லூரி பீடாதிபதி

Image
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிரியில்  கல்வி கற்கும் மாணவ ஆசிரியர்கள்  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால்  தெரியப்படுத்துமாறு கோருகிறார்  யாழ்ப்பாணம் கல்வியற்கல்லூரி பீடாதிபதி  சுப்பிரமணியம் பரமானந்தம். தற்போதைய அசாதாரண சூழ்நிலையில்  தோற்று நோய்  காரணமாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிரியில்  கல்வி கற்கும் மாணவ ஆசிரியர்கள்,அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களது பாடநெறிப் பொறுப்பு விரிவுரையாளர்களூடாகவோ அல்லது ஏனைய   விரிவுரையாளர்களினூடாகவோ  அல்லது நேரடியாகவோ என்னுடன் தொடர்பு கொள்ளு மாறு  யாழ்ப்பாணம் கல்வியற்கல்லூரி பீடாதிபதி  சுப்பிரமணியம் பரமானந்தம்  அறிவித்துள்ளார். மேலும்  உங்களது சக மாணவர்கள்  அல்லது அவர்களின் குடும்பம்  பாதிப்புக்குள்ளாகி இருந்தால்  அது தொடர்பாகவும் ஏனைய  மாணவ ஆசிரியர்களும் தகவலை வழங்கலாமென பீடாதிபதி  சுப்பிரமணியம் பரமானந்தம் அறிவித்தல் விடுத்துள்ளார்  

நற்பிட்டிமுனை விவசாயிகளின் விடயத்தில் சவளக்கடை கமநல சேவை மத்திய நிலையம் அசமந்தப்போக்கு

Image
நற்பிட்டிமுனை கிராம விவசாயிகளுக்கு தங்களின் வயல் வேலைகளுக்கு செல்ல தடை போடப் படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஊரடங்கு காலத்திலும் விவசாயிகள் தங்கள் கடமைகளை செய்வதற்கு தடையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் நற்பிட்டிமுனை விவசாயிகளுக்கு  அது சாத்தியமற்று போகின்றது நற்பிட்டிமுனை கிராமமும் விவசாயிகளும் கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் காணப்படுகின்றது அவர்களது நெற்செய்கை காணி சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குள் அமையப் பெற்றுள்ளது. சவளக்கடை பொலிஸாரின் அனுமதியை பெற வேண்டுமெனில் அங்குள்ள கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் கல்முனை பிரிவுக்குட்பட்டவருக்கு  நாவிதன் வெளி கிராம சேவகர் அனுமதி வழங்க முடியாத நிலையில் விவசாயிகள் திண்டாட்ட நிலையில் உள்ளனர் இந்த நிலை நீடித்தால் விதைப்பு காலம் நீடிக்கலாமெனவும் சில வேளை நெற்செய்கை கைவிடப்படும் நிலை உருவாகும் எனவும் விவயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கல்முனையையும் நாவிதன்வெளியையும் பிரிக்கும் கிடங்கி பாலத்துக்கப்பால் செய்வதற்கு பாதுகாப்பு படையினரின் அனுமதி பெறவேண்டியுள்ளது . இந்த அனுமதியை சவளக்கடை...

இதுவரை கொரோனா பாதிப்பு 1,015,709 - பலி 53,069 பேர்!

Image
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 1,015,709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 53,069 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 211,409 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 7 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 37 ஆயிரத்து 646 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

Image
பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.