கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - இருவர் பூரண சுகம்



கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 49 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 190 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, தற்போது 133 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். ,

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்