இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி




இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.

48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Comments

Popular posts from this blog

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்குசான்றிதல்கள்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்