இன்று முதல் நாளாந்தம் அனைத்து மருந்தகங்களும் திறந்து வைப்பு
மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இன்று முதல் சகல தினங்களிலும் திறந்திருக்கும் என அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்று பிற்பகல் அளவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் மருந்தகங்களின் முன் குழுமியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
தற்போதைய நிலைமையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களின் ஒரு அங்கமாக நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களை இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்குமாறு ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
Comments
Post a Comment