இதுவரை கொரோனா பாதிப்பு 1,015,709 - பலி 53,069 பேர்!
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ளது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 1,015,709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 53,069 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 211,409 பேர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 7 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 37 ஆயிரத்து 646 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment