கல்முனை மாநகர முதல்வர் எங்களையூம் எங்கள் பிரதேசத்தையூம் புறக்கணித்து செயல்படுகின்றார்
ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர் கல்முனை மாநகர முதல்வர் எங்களையூம் எங்கள் பிரதேசத்தையூம் புறக்கணித்து செயல்படுகின்றார். எங்களின் பிரதேசம் சுகாதார சீர் கேட்டில் முன்னிலை வகிக்கிறது. எங்களின் அவல நிலையை பல தடவைகளில் கல்முனை மாநகர முதல்வருக்கு கூறியிருக்கின்றோம் . கல்முனை பௌத்த விகாரை பகுதியில் வாழும் தமிழ் சிங்கள மக்கள் கல்முனை மாநகர சபைக்கு வரி எதுவூம் செலுத்தக் கூடாதென கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர் கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் இடம் பெற்ற பொலிஸ் நடமாடும் சேவையில் உரையாற்றும் போது தெரிவித்தார். கல்முனை பொலிஸார் ஏற்பாடு செய்த மது ஒழிப்பு விழிப்புணர்வூ ஊர்வலமும் பொலிஸ் நடமாடும் சேவையூம் சனிக்கிழமை கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் நடை பெற்றது. கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவூ பிரதேச செயலாளர் கே.லவநாதன் இ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார்இ நாவிதன் வெளி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.மதன் உட்பட சமயப் பெரியார்கள்இ சிவில் பா...