ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்திக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரின் பங்களிப்பு

கல்முனை மாநகர சபை  ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஏ.எச்.ஏ.நபாரின்  பெரு  முயற்சியால்  அம்பாறையில் இருந்து கொண்டுவரப்பட்ட கனரக  இயந்திர உதவியுடன்  சாய்ந்தமருது நகரில்  பழுதடைந்து ஒளிராத நிலையில் காணப்பட்ட நவீன சோடியம் மின் விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

 கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகேவுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையினால் இத்திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பயனாக  சாய்ந்தமருது நகரின் பிரதான நுழைவாயில் தொடக்கம் பொலி வோரியன் சந்தி வரையான பகுதியில் அமைந்துள்ள  ஒளிராத சோடியம் மின் விளக்குகள் மீண்டும் ஒளிர்வு கொடுக்கின்றன.
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் நேரடி மேற்பார்வையில் இடம்பெற்ற இத்திருத்தப்பணி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.எச்.எம்.நபார்,  ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
தனது நிறுவனத்திற்கு சொந்தமான நவீன வாகனத்தை எமக்கு இலவசமாகத் தருவதற்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே முன்வந்திருந்தார் என முதல்வர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார். இதற்காக அவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி அனோமா கமகே மற்றும்  இவ்வாகனத்தை பெற்று தர உடந்தையாக இருந்த எமது மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எம். நபார் ஆகியோருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். 

கல்முனை வரலாற்றில் இவ்வாறான வேலை திட்டம் இடம் பெறுவது முதல் தடவை என்றும்  இந்த இயந்திரம் எனது தனிப்பட்ட முயற்சியால் கொண்டுவரப்பட்டதென்றும் இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் தயா கமகே வுக்கு நன்றி தெரிவிப்பதாக மாநகர சபை உறுப்பினர் நபார் கல்முனை நியூஸ் இனைய தளத்துக்கு தெரிவித்தார் .

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்