கல்முனை மாநகர முதல்வர் எங்களையூம் எங்கள் பிரதேசத்தையூம் புறக்கணித்து செயல்படுகின்றார்

 ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர்
கல்முனை மாநகர முதல்வர் எங்களையூம் எங்கள் பிரதேசத்தையூம் புறக்கணித்து செயல்படுகின்றார். எங்களின் பிரதேசம் சுகாதார சீர் கேட்டில் முன்னிலை வகிக்கிறது. எங்களின் அவல நிலையை பல தடவைகளில் கல்முனை மாநகர முதல்வருக்கு கூறியிருக்கின்றோம் . கல்முனை பௌத்த விகாரை பகுதியில் வாழும் தமிழ் சிங்கள மக்கள் கல்முனை மாநகர சபைக்கு வரி எதுவூம் செலுத்தக் கூடாதென கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர் கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் இடம் பெற்ற பொலிஸ் நடமாடும் சேவையில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
கல்முனை பொலிஸார் ஏற்பாடு செய்த மது ஒழிப்பு விழிப்புணர்வூ ஊர்வலமும் பொலிஸ் நடமாடும் சேவையூம் சனிக்கிழமை கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் நடை பெற்றது.

கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவூ பிரதேச செயலாளர் கே.லவநாதன் இ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார்இ நாவிதன் வெளி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.மதன் உட்பட சமயப் பெரியார்கள்இ சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள்இ கிராம சேவை அதிகாரிகள்இஆசிரியர்கள்இமாணவர்கள்இ பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர் மேற் கண்டவாறு பேசினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்கான அதிகாரம் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது எனக்கு கவலையாக உள்ளது. பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நான் குரல் கொடுத்தமைக்காக கல்முனையில் எனக்கு மரியாதை இல்லாமல் போயூள்ளது. சமுதாயத்துக்கு உதவூவதை சிலர் வெறுக்கின்றனர். எனக்கு இனபாகுபாடு கிடையாது மனிதர்கள் என்று அனைவரையூம் பார்க்கின்றேன். நாட்டின் சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் பௌத்தர்கள் மட்டுமல்ல சேர் பொன்னம்பலம் இராமநாதன்இஅறிஞர் சித்திலெப்பை போன்றவர்களும்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதே போன்று கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நானும் குரல் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது.
நான் கல்முனைக்கு வந்து 8 வருடமாக எமது பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கல்முனை மேயர் எம்மையூம் எமது பிரதேசத்தையூம் புறக்கணிக்கின்றார். கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட கழிவூ நீர் தொடர்பாக கல்முனை மாநகர சபை பொடுபோக்குடன் செயல்படுகிறது. அந்தக் கழிவூ நீர் தொடர்பாக எமக்கு நீதி மன்றத்தினாலும் தீர்ப்புக் கிடைக்கவில்லை. இதற்காக எனது உயிர் போனாலும் போராடுவேன் என கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர் அங்கு தெரிவித்தார்.
பௌத்த தேவாலயத்துக்கு முன்பாக குப்பைகள் வீசப்படுகின்றன. இதற்கான திட்டம் கல்முனை மாநகர சபையால் முன்னெடுக்கப்படவில்லை. தினமும் சுகாதார கேடு எமது பகுதியில் காணப்படுகின்றது. பொலிஸார் கூட இதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை இவ்வாறான நிலையில் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் எதற்காக கல்முனை மாநகர சபைக்கு வரிப்பணம் செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார். இந்த விடயங்களை கல்முனை மாநகர முதல்வரின் கவனத்துக்கு பல தடைவ கொண்டு வந்துள்ளேன் முதல்வர் இவ்விடயத்தை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலையாக உள்ளது.
கல்முனை மாநகர பிரதேசம் கழிவூகள் கொட்டப்படுகின்ற அழகில்லாத பிரதேசமாகவே காட்சியளிக்கின்றது. மட்டக்களப்புஇ காத்தான்குடிஇ ஏறாவூர் பிரதேசத்தை அழகான நகரமாக மாற்ற முடியூம் என்றால் ஏன் கல்முனையை அழகு படுத்த முடியாது என அவர் அங்கு கேள்வி எழுப்பினார்.
கல்முனை நகரத்துக்குள் வாழ்கின்ற தமிழ்இமுஸ்லிம்இசிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழாவிட்டால் கடந்த 30 வருட யூத்த காலத்தை விட மிக மோசமான நிலை இங்கு ஏற்படும் என அவர் எச்சரித்தார். கல்முனை பிரதேசத்தில் உள்ள மக்களின் மன நிலை மாற்றம் அடைய வேண்டும் சமய நிகழ்ச்சிகளை புறக்கணிக்கின்ற மக்கள் இசை நிகழ்ச்சிகள் என்றால் திரளாக ஒன்று கூடுகின்றனர் என்றார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்