பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால்நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்முனைக்குடி திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் கட்டிடத் திறப்பு விழா



பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத் தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்முனைக்குடி திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் கட்டிடத் திறப்பு விழா நேற்று  இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வங்கிக் கட்டிடத்தினைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், கல்முனை பிரதேச செயலக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், சிறப்பு அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் அல்-ஹாஜ்.ஏ.சீ.ஏ.நஜீம், கல்முனை மகாசங்க சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்..எஸ்.நயீமா, சமுர்த்தி முகாமையாளர் எஸ்.சதீஸ் சிறப்பு அதிதிகளாகவும், விசேட அதிதிகளாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யூ.ஏ.கப்பார், சட்டத்தரணி லியாக்கத் அலி பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எம்.ஏ.ஜின்னாஹ் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வங்கியில் புதுவருட கொடுக்கல், வாங்கல்களை ஆரம்பித்து வைத்ததுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இவ்வங்கிக் கட்டிட நிர்மாணத்திற்கு இலங்கை சமுர்த்தி அதிகார சபை 36 லட்சம் ரூபாவினைசெலவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்