முதலை இழுத்துச் சென்ற மாணவியை போராடிக் காப்பாற்றிய சகோதரிகள்!
குளிக்க சென்ற மாணவியை முதலை கடித்து படுகாயம் முதலை பிடியில் இருந்து மீட்கப் பட்ட மாணவி சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி கண்டி வைத்திய சாலைக்கு இடமாற்றம்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெயனாகாடு பிரதேசத்தில் இந்த சமபவம் இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது நேற்று முன்தினம் மாலை சம்மாந்துறை மலையடி கிராமத்தை சேர்ந்த சம்மாந்துறை பிரதேசத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்கும் மாணவி குளிப்பதற்கு தனது இரு சகோதரிகளுடனும் மற்றும் உறவினர்களுடனும் நெய்னா காடு ஆற்றுக்கு சென்று குளித்துக் கொண்டிருந்த வேளை பாரிய முதலை ஒன்று குறித்த மாணவியின் கால் பகுதியில் கடித்து இழுத்து செல்வதை சகோதரிகள் இருவரும் கண்டு கூக்குரல் இட்டவாறு அரை மணித்தியாலம் அந்த சகோதரிகள் இருவரும் முதலையுடன் போராடி சகோதரியை மீட்டுள்ளனர்.
காலில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதால் மாணவிக்கு இரத்தப் பெருக்கு ஏற்பட்டு மயங்கிய நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையில் சிரமத்துக்கும் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளனர். வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சில மணித்தியாலங்களில் கண்டி போதனா வைத்திய சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் படுவதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .
எங்களது தங்கையை முதலை இழுத்து சென்ற போது எங்கள் இருவருக்கும் இறைவன் ஒருவகையான தைரியத்தை தந்தான் முதலையை கட்டிபிடித்து தங்கையை மீட்க போராடினோம் நாங்கள் அந்த போராட்டத்தை செய்யாமல் பயந்திருந்தால் எமது சகோதரியை இழந்திருப்போம் என தங்கையை மீட்ட சகோதரிகள் இருவரும் தெரிவித்தனர்.
Comments
Post a Comment