சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்கள்நியமனங்கள்.

 மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவு கல்வியமைச்சு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் புரண ஒத்துழைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சியின் முக்கியமானதோர் அங்கமாக கருதப்படும் ஆசிரியர்களின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கல்வி நிருவாகத்தின் கீழ்வரும் மாவட்ட வலய மற்றும் கோட்ட மட்டத்தில் சுற்றோடல் முன்னோடி ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.



இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை ( 12 ) அம்பாறை நகரிலுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதான காரியாலயத்தில் கிழக்கு மாகாண சுற்றாடல் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.ஸி.நஜீப் தலைமையில் இடம்பெற்றது.


 இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கிவைத்தார்.

அம்பாறை மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக எம்.ரீ.நௌபல் அலி அவர்களும் கல்முனை வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக ஜனாபா மஸுரா அவர்களும் சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் அவர்களும் கல்முனை முஸ்லிம் கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக எம்.ரீ.இஸ்ஸதீன் அவர்களும் நிந்தவுர் கோட்டத்திற்கு அப்துல் றஹீம் அவர்களும் அக்கரைப்பற்று வலயத்திற்கு முஹம்மட் அன்வர் அவர்களும்  அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தக்கண்டிய மகாஓயா ,  உகன தமன பதியத்தலாவ மற்றும் அம்பாறை போன்ற சிங்களப் பகுதிகளுக்கும் கல்முனை தமிழ் கோட்டம் திருக்கோவில் வலயம் , சம்மாந்துறை வலயம் இறக்காமம் கோட்டம் என்பவற்றிற்கும் சுற்றோடி முன்னோடி ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


1984 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்படும் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்பாடுகள் இன்று நாடளாவிய ரீதியில்விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நம் நாட்டுச் சுற்றாடலை பாதுகாப்பதற்காக எதிர்கால சந்ததிகளைஉருவாக்குவதற்கு சுற்றோடி முன்னோடி ஆணையாளர்களின் புரண ஆதரவு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்