தமிழ் சிங்கள புது வருட புத்தாண்டு விளையாட்டு விழா
தமிழ் சிங்கள புது வருடத்தைக் கொண்டாடும் வகையில் பாண்டிருப்பு விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த புத்தாண்டு விளையாட்டு விழா இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரண்டு தினங்கள் நடை பெறவூள்ள புத்தாண்டு விழாவின் முதல் நாளான இன்று 13.04.2014 கல்முனையிலிருந்து மட்டக்களப்பு வரையான சைக்கிள் ஓட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாண்டிருப்பு விழையாட்டுக் கழகத்தின் தலைவர் லயன்.ஸ்ரீ ரங்கன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனஇ அம்பாறை திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.அன்வர்டீன் இ கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.
நாளைய தினம் (14) காலையில் மரதன் ஓட்டப் போட்டியூம்இ மாலையில் மைதான நிகழ்ச்சிகளும் பாண்டிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் நடை பெறவூள்ளது.
(h)
ReplyDelete