கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் ஜய வருட கலாச்சார விளையாட்டு விழா
ஜய வருடப் பிறப்பை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் அனைத்து தர உத்தியோகத்தர்களும் இணைந்து நடாத்தும் கலாச்சார விளையாட்டு விழா (26) சனிக்கிழமை மாலை நடை பெறவூள்ளது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்திய சாலை மைதானத்தில் நடை பெறவூள்ள இந்த புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா நிகழ்வூகளில் கல்முனை தமிழ் பிரிவூ பிரதேச செயலாளர் கே.லவநாதன் பிரதம அதிதியாகவூம், கல்முனை பொலிஸ் நிலைய தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் கௌரவ அதிதியாகவூம் கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சாந்தலால் விசேட அதிதியாகவூம் கலந்து சிறப்பிக்கவூள்ளனர்.
இன்றய தினம் காலை நிகழ்வூகளாக மரதன் ஓட்டம் ,கபடி, கிளித்தட்டு போன்ற போட்டிகள் இடம் பெற்று மாலை நிகழ்வூகளாக தலையணைச் சமர்,தேங்காய் துருவூதல்,மாவிற்குள் காசு எடுத்தல், சோடா போத்தலுக்கு வளயம் எறிதல்,யானைக்கு கண் வைத்தல்,போத்தலில் தண்ணீர் நிரப்புதல்,சமனிலை ஓட்டம்,கிடுகு இழைத்தல்,தொப்பி மாற்றுதல்,பலூன் உடைத்தல் ,மிட்டாய் பொறுக்குதல், பணிஸ் சாப்பிடுதல், ஊசி நூல் கோர்த்தல், விநோத உடை ,கயிறு ,ழுத்தல் முட்டி உடைத்தல், சங்கீதக் கதிரை, சாக்கு ஓட்டம் என்பனவூம் இடம் பெற்று மறு காலையில் சைக்கிள் சவாரியூம் நடைபெறவூள்ளது.
Comments
Post a Comment