கல்முனை சட்டத்தரணிகளுக்கென சட்ட நூலகத்துடன் கூடிய மாடிக் கட்டடம்

 - மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முயற்சி -


"கல்முனைப் பிராந்திய சட்டத்தரணிகளின் நலன் கருதி, சட்ட நூலகம், ஒன்றுகூடல் மண்டபம், ஆலோசனைக் கூடம், தனியான சிற்றுண்டிச்சாலை போன்ற வசதிகளுடன் கூடிய மாடிக் கட்டடமொன்றை இந்த வருடம் நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்துள்ளேன்" - இவ்வாறு, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தகவல் வெளியிட்டார். கல்முனையைச் சேர்ந்த பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியும், முன்னாள் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருமான சட்டத்தரணி எம்.கே.பேரின்பராசா அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கங்கத்தின் உபதலைவராக (கிழக்கு வலயம்) தெரிவு செய்யப்பட்டுள்ளமையை முன்னிட்டு அவரைக் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் நடத்தியது. கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஸாக் தலைமையில், சாய்ந்தமருது சீபிறிஸ் மண்டபத்தில் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்துகொண்டார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- "நமது சட்டத்தரணிகளுக்கான இத்தகைய வசதிகளுடன் கூடிய கட்டடமொன்றை கல்முனை நீதிமன்ற வளாகத்தில் நிர்மணிக்க வேண்டுமென்பதை 2010 ஆம் ஆண்டில் நான் உத்தேசித்தேன். "எனினும் இரண்டோ அல்லது மூன்று மாடிகளைக் கொண்டதாகவோ இந்த வருடம் இக்கட்டடத்தை நிர்மாணிக்க வேண்டுமென்ற முன்முயற்சிகளை நான் எடுத்து வருகின்றேன். 



"பூநகரி பாலத்திற்கு 19 பேர் அடிக்கல் நட்ட வரலாறு உண்டு. 19 ஆவது நபராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அடிக்கல் நட்டுத்தான் அப்பாலம் நிர்மாணிக்கப்பட்டது. எனவே எந்த முயற்சியையும் எளிதில் கைவிட்டுவிடக்கூடாது. "இந்த முயற்சிக்கும் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சகலரதும் ஆதரவும், ஒத்துழைப்பும் மிக அவசியமாகும். "மேலும் சிரேஷ்ட சட்டத்தரணியென்ற வகையில் சிறப்புற செயலாற்றி, சகலருடனும் ஒத்துழைக்கக்கூடிய பேரின்பராசாவுக்கு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவர் (கிழக்கு வலயம்) பதவி கிடைத்தமை மிகப் பொருத்தமானதாகும்." - என்றார் அவர் இந்நிகழ்வில் கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முகைடீன், கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஜூட்சன் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். -


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்