Posts

முஸ்லிம்கள் நாளைநோன்பு

Image
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசத்தில் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சற்றுமுன்னர் அறிவித்ததுள்ளது. இதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை அதிகாலை நோன்பு நோற்கலாம் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது. ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மத்ரஸதுல் ஹமீதிய்ய மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.  இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயமுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள், தைக்காக்கள் மற்றும் சாவியக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்வு

Image
  அம்பாறை மாவட்ட சேனைகுடியிருப்பு கமநல சேவைகள் நிலையத்தின் கமநல வங்கி மூலமாக கமத்தொழில் மற்றும் பயிர் செய்கை மேற் கொள்ளும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு சமீபத்தில் கமநல சேவைகள் அபிவிருத்தி குழு தலைவர் ஏ.  அப்துல் கபூர்  தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் சட்டத்தரணி  ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாகவும் ,சிரேஷ்ட  கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.பீ.மௌலானா  கௌரவ அதிதியாகவும்  மற்றும்  விவசாய திணைக்கள அதிகாரிகள் ,விவசாயிகள் கலந்து கொண்ட இவ்வைபவத்தில்  விவசாயிகளுக்கு கடன் காசோலை ச்வளங்கி வைக்கப் பட்டது .

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலயத்தில் வியாழக்கிழமை (2013.07.04) அன்று கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ .கையூம் தலைமையில் இடம் பெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவில் கல்முனை வல ய கல்வி பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Image

ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தனது 25 வருட ஊடக சேவையை இவ்வருடம் பூர்த்தி செய்கிறார்.

Image
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பி.எம்.எம். ஏ.காதர் அவர்களின் ஊடக சேவையைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு வியாழக்கிழமை (04.07.2013) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை  சமூகத்தின் ஏற்பாட்டில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அதிபர் ஏ.ஆர்.எம்.தௌபீக் பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஷர்ரப்,பாடசாலை அபிவிருத்தி சபையின் செயலாளர் என்.எம்.எம்.இஸ்மாயீல்,பழைய மாணவர் சங்கச் செயலாளரும், கல்முனை மாநகர சபையின் ஆணையாருமான ஜே.லியாகத் அலி ஆகியோர் இந்த கௌரவிப்பு நிகழ்வில் இணைந்து கொண்டார்கள். 25 வருட ஊடக சேவையை இவ்வருடம் பூர்த்தி செய்யும் சஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் இதுவரை 300க்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், 200க்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கையில் வெளியாகின்ற அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும், பல இணைய...

பொது பலசேனாவின் கூட்டம் கல்முனையில் என்பது ஒரு வதந்தி - முதல்வர் சிராஸ் மீராசாஹிப்

Image
பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) கல்முனையில் இடம்பெற உள்ளது என்பது ஒரு வதந்தி என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். மேற்படி கூட்டம் கல்முனை மாநகர எல்லைக்குள் நடைபெற ஏற்பாடாகிவருவதாக சிலர் தெரிவித்தனர். இது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வராகிய நான் பொலிஸாருடன் இணைந்து மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிற்கு சென்று ஆராய்ந்தபோது அவ்வாறான ஒரு ஏற்பாடு இன்றுவரை இல்லை என்பது புலனாகியது. பல தசாப்த காலமாக யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு தவித்தோம். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அயராத முயற்சியால் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது இதனால் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம் இத்தறுவாயில் கல்முனை மாநகர எல்லைக்குள் இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லுறவை சீர் குலைக்கும் விதத்தில் எவர் செயற்பட்டாலும் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான சகல முயற்சிகளும் மேற்கொள்வதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மீலாதுன் நபி விழா

Image
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  அனுசரணையுடன் கிழக்கு மாகாண கல்விதினைக்கள்ம் ஏற்பாடு செய்த மீலாதுன் நபி விழா வைபவம் வெள்ளிகிழமை இன்று கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி சேர் ராசீக் பரீட் மண்டபத்தில் நடை பெற்றது. மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம்  தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணாமலை ,மட்டக்களப்பு,அம்பாறை  மாவட்டங்களில் உள்ள  17 வலயக்  கல்வி அலுவலக  மாணவர்கள் கலந்து கொண்டனர் . காத்தான்குடி ஜாமிஉல் பலாஹ்  அரபுக்கலாசாலையின் பீடாதிபதி மௌலானா மௌலவி அப்துல்லா ஹசரத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மூன்று மாவட்டத்திலும் உள்ள வளைய கல்விப்பணிப்பாளர்கள் ,பிரதி கல்விப் பணிப்பாளர்கள்,உதவி கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர் கள் ,பெற்றோர்கள் என ஏராளமானோர்  வைபவத்தில் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இங்கு இடம் பெற்றதோடு போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னம் மற்றும் பரிசுகளும் வழங்க...

சீனா வத்தைப் பள்ளிவசால் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

Image
புனர் நிர்மாணம்  செய்யப்பட்ட  பேருவளை  சீனாவத்தை ஜும்ஆ  பள்ளிவாசலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார். அதன் பின்னர் ஜனாதிபதி பள்ளிவாசலுக்குள் அமர்ந்து மக்களுடன்  கலந்துரையாடினார். திறப்பு விழாவுக்கு வருகை தந்த முஸ்லிம் பெண்களையும் சந்தித்த ஜனாதிபதி அவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.வைபவத்தில் உரையாற்றி ஜனாதிபதி- தற்போதைய மாகாண சபை ஆட்சி முறைகளில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். ஒரு இனத்துக்காக நாட்டைப் பிரிக்க முடியாதென்றும் இனம் மதம் என்ற ரீதியல் பிரிவினைகளை ஏற்படுத்திக்கொள்ளமல் தேசிய ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சாய்ந்தமருது கொள்ளை பொருட்களும் மீட்பு கொள்ளையரும் கைது

Image
கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இயங்கி வந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றில் கொள்ளை இடப்பட்ட கணணி இயந்திரங்கள் வீடொன்றில் இருந்து கல்முனை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது . சாய்ந்தமருது -16 அஹமட் வீதியில்  இயங்கி வந்த முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி  செயல் முன்னணி  அரச சார்பற்ற நிறுவனத்தில்  கடந்த 2012.12.11 ஆந்திகதி  இரவு  அலுவலகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த கணணிகள்  உட்பட  உபகரணங்கள் பல  கொள்ளையிடப்பட்ட நிலையில் நிறுவனத்தினரால் கல்முனைபொ லீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது . கொள்ளை இடப்பட்ட பொருட்களின் பெறுமதி இரண்டு இலட்சத்தி ஐம்பத்தாறாயிரம் ரூபா என் போலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நேற்று புலன் விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இப்பொ ருட்களை மறைத்து வைத்திருந்த சாய்ந்தமருதை சேர்ந்த  அப்துமஜீத் அப்துல் நஸ்பீன்  கல்முனை பொலிசாரினால் இன்று கைது செய்து விசாரிக்கப் பட்ட போது  கொள்ளையிடப்பட்ட பொருட்களுக்களும்  கைப்பற்றப்பட்டுள...

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

Image
பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பித்து வைக்கும் முன்னோடி நிகழ்வாகஇன்று   வியாழக்கிழமை அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் இணைந்து கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு சிரமதான வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது  இதன் முலம் கல்முனை வலயத்திலுள்ள 63 பாடசலைகளிலும் தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தி நோயற்ற மாணவ சமுகத்தை உருவாக்க திட்டம் வகுத்துள்ளதாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் தெரிவித்துள்ளார். வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் தலைமையில் இன்று நடை பெற்ற வைபவத்தில் நிருவாக உத்தியோகத்தர் ஜுனைதீன் ää கணக்காளர் சாலீதீன் உட்பட உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . ,jw;fikthf ,d;W fy;Kid fy;tp tyaj;jpYs;s gy ghlrhiyfspy; nlq;F xopg;G Ntiyj; jpl;lk; Muk;gpj;J itf;fg;gl;lik Fwpg;gplj;jf;fJ 

நற்பிட்டிமுனை எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார்

Image
தென்கிழக்குப்பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார் சீன அரசினால் 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டு சீனா பீஜிங் தொழல்நுட்ப பல்கலைக்கழகத்தில் கலாநிதி மாணவனாக இணைந்து கொண்ட இவர் அங்கு மேற்கொண்ட மிகச்சிறந்த ஆய்வுகள்மற்றும் வெளியீடுகளுக்காக 2010மற்றும்2011ஆண்டுகளில் மிகச்சிறந்த கலாநிதி மாணவனாகவும் தெரிவு செய்யப்பட்டார் நற்பிட்டிமுனையைப்பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக்கல்வியை கல்முனை கார்மல் பாத்திமாக்கல்லூரியிலும் உயர்கல்வியை பேராதனைப்பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்ட இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எச்.முகம்மது மற்றும் ஹாஜியானி எஸ்.மீரா உம்மா ஆகியாரின் புதல்வராவார்.

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றம் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தம்.

Image
கிழக்கு மாகாணத்திற்குள் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி வலயங்களுக்குள்ளும், வலயங்களுக்கு அப்பாலும், மாகாணத்திற்கு வெளியிலும் சகல இடமாற்றங்களும் டிசம்பர் 31ம் திகதி வரை எக்காரணத்திற்காகவும் மேற்கொள்ளக்கூடாது எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான புதிய இடமாற்ற சபைகள் அமைக்கப்பட்டு வலய மாகாண மட்டத்திலான இடமாற்றக் கொள்கை விடுக்கப்பட்ட பின்னர் ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் சில கல்வி வலயங்களில் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக ஆசி ரியர் சங்கங்கள் கல்வி அமைச்சின் கவனத் திற்கு கொண்டு வந்துள்ளதை யடுத்தே இந்நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

கல்முனை பகுதியில் 49 தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்

Image
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவினுள் 49 தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொழு நோய் வைத்திய நிபுணர் டொக்டர் அலி அக்பர் தெரிவித்தார். பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் (26ம் திகதி) தொழு நோய் பரிசோதனையும் சிகிச்சையும் நடைபெற்றது. 178 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அதில் ஒருவர் மட்டுமே தொழு நோயாளியென இனம் காணப்பட்டுள்ளது. தொழுநோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் சுகாதாரப் பரிசோதகர் ஹல்மதி அவர்களின் ஏற்பாட்டில் இம்மாதம் நடைபெற்ற தொழுநோய்ப் பரிசோதனை முகாம்களில் சம்மாந்துறையில் 09 பேரும், காரைதீவில் 05 பேரும், சாய்ந்தமருதில் 02 பேரும், கல்முனை தெற்கில் ஒருவரும், பொத்துவிலில் ஒருவரும் தொழு நோயாளர்களென இனம் காணப்பட்டுள்ளார்கள். கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எல்லைப் பிரிவினுள் தொழுநோயாளரென இனம் காணப்பட்ட 49 பேர்களில் ஆறு பேர் சிறுவர்களென தொழு நோய்த்தடுப்பு வைத்திய நிபுணர் டாக்டர் அலி அக்பர் தெரிவித்தார். தொழு நோய்த் தடுப்பு முகாம்களுக்கும் சிகிச்சைக்குமாக பிதியிஞிணிரிளி நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. பொத்துவிலில் நடைபெற்ற த...

நடை பாதைக்கு தடை கல்முனை பொலிசார் நடவடிக்கை

Image
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை நகரம், கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு பிரதேசங்களின் பிரதான வீதியிலுள்ள வர்த்தகக் கடைகளினால் நடைபாதைகளில்; வைக்கப்பட்டிருக்கும விற்பனைப் பொருட்களை அகற்றும் பணியினை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.  அதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச வர்த்தக கடைகளினால் நடைபாதைகளில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அகற்றும் பணியினை கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வசந்தகுமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று மேற்கொண்டனர்.  இதன்போது பொலிஸார் வர்த்தக கடைகளின் முன்னுள்ள பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.  இனிவரும் காலங்களில் நடைபதைகளில் பொருட்களை காட்சிப்படுத்தும் வர்;த்தக கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

சாய்ந்தமருது செஸ்டோ அமைப்பின் இரத்ததான நிகழ்வு

Image
  சாய்ந்தமருது செஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் இரத்ததான நிகழ்வு இன்று கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. செஸ்டோ அமைப்பின் தலைவர் பொறியியலாளர் எஸ்.எச்.எம்.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களான ரீ.எம்.எஸ். வெலிகடராச்சி, என்.எம்.மெடகொடகெட்டி மற்றும் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு தாதி உத்தியோகத்தர் எஸ்.எச்.ஹனீம் ஆகியோரின் வழி நடத்தலில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் செஸ்டோ அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.