ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தனது 25 வருட ஊடக சேவையை இவ்வருடம் பூர்த்தி செய்கிறார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பி.எம்.எம். ஏ.காதர் அவர்களின் ஊடக சேவையைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு வியாழக்கிழமை (04.07.2013) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

அதிபர் ஏ.ஆர்.எம்.தௌபீக் பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஷர்ரப்,பாடசாலை அபிவிருத்தி சபையின் செயலாளர் என்.எம்.எம்.இஸ்மாயீல்,பழைய மாணவர் சங்கச் செயலாளரும், கல்முனை மாநகர சபையின் ஆணையாருமான ஜே.லியாகத் அலி ஆகியோர் இந்த கௌரவிப்பு நிகழ்வில் இணைந்து கொண்டார்கள்.

25 வருட ஊடக சேவையை இவ்வருடம் பூர்த்தி செய்யும் சஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் இதுவரை 300க்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், 200க்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கையில் வெளியாகின்ற அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும், பல இணையத்தளங்களுக்கும் ஊடகவியலாளராகப் பணியாற்றுகின்றமை குறிப்பிடத் தக்கது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்