நற்பிட்டிமுனை எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார்
தென்கிழக்குப்பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார்
சீன அரசினால் 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்திட்டத்தின் கீழ்
தெரிவுசெய்யப்பட்டு சீனா பீஜிங் தொழல்நுட்ப பல்கலைக்கழகத்தில் கலாநிதி
மாணவனாக இணைந்து கொண்ட இவர் அங்கு மேற்கொண்ட மிகச்சிறந்த ஆய்வுகள்மற்றும் வெளியீடுகளுக்காக 2010மற்றும்2011ஆண்டுகளில் மிகச்சிறந்த கலாநிதி மாணவனாகவும் தெரிவு செய்யப்பட்டார்
நற்பிட்டிமுனையைப்பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக்கல்வியை கல்முனை கார்மல் பாத்திமாக்கல்லூரியிலும் உயர்கல்வியை பேராதனைப்பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்ட இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எச்.முகம்மது மற்றும் ஹாஜியானி எஸ்.மீரா உம்மா ஆகியாரின் புதல்வராவார்.
Comments
Post a Comment