கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றம் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தம்.

கிழக்கு மாகாணத்திற்குள் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி வலயங்களுக்குள்ளும், வலயங்களுக்கு அப்பாலும், மாகாணத்திற்கு வெளியிலும் சகல இடமாற்றங்களும்டிசம்பர் 31ம் திகதி வரை எக்காரணத்திற்காகவும் மேற்கொள்ளக்கூடாது எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான புதிய இடமாற்ற சபைகள் அமைக்கப்பட்டு வலய மாகாண மட்டத்திலான இடமாற்றக் கொள்கை விடுக்கப்பட்ட பின்னர் ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடம் முழுவதும் சில கல்வி வலயங்களில் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக ஆசி ரியர் சங்கங்கள் கல்வி அமைச்சின் கவனத் திற்கு கொண்டு வந்துள்ளதை யடுத்தே இந்நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்