கிழக்கு மாகாண மீலாதுன் நபி விழா

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  அனுசரணையுடன் கிழக்கு மாகாண கல்விதினைக்கள்ம் ஏற்பாடு செய்த மீலாதுன் நபி விழா வைபவம் வெள்ளிகிழமை இன்று கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி சேர் ராசீக் பரீட் மண்டபத்தில் நடை பெற்றது.

மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம்  தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணாமலை ,மட்டக்களப்பு,அம்பாறை  மாவட்டங்களில் உள்ள  17 வலயக்  கல்வி அலுவலக  மாணவர்கள் கலந்து கொண்டனர் .

காத்தான்குடி ஜாமிஉல் பலாஹ்  அரபுக்கலாசாலையின் பீடாதிபதி மௌலானா மௌலவி அப்துல்லா ஹசரத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மூன்று மாவட்டத்திலும் உள்ள வளைய கல்விப்பணிப்பாளர்கள் ,பிரதி கல்விப் பணிப்பாளர்கள்,உதவி கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் என ஏராளமானோர்  வைபவத்தில் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இங்கு இடம் பெற்றதோடு போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னம் மற்றும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது .
நடை பெற்ற  தமிழ் கட்டுரை போட்டியில் சம்மாந்துறை கோரக்கல் தமிழ் மகா விதியாலய  மாணவி செல்வி செரோமி ஸ்ரேக்ஸ்  முதலிடம் பெற்று பரிசு பெற்றுள்ளார். இஸ்லாமியர்களின் மீலாதுன் நபி விழாவில் இந்து சமய மாணவி வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியதாகும் .















தகவலும் படமும் -யு.எம்.இஸ்ஹாக் 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்