கல்முனை பகுதியில் 49 தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்


கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவினுள் 49 தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொழு நோய் வைத்திய நிபுணர் டொக்டர் அலி அக்பர் தெரிவித்தார்.
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் (26ம் திகதி) தொழு நோய் பரிசோதனையும் சிகிச்சையும் நடைபெற்றது. 178 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அதில் ஒருவர் மட்டுமே தொழு நோயாளியென இனம் காணப்பட்டுள்ளது.
தொழுநோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் சுகாதாரப் பரிசோதகர் ஹல்மதி அவர்களின் ஏற்பாட்டில் இம்மாதம் நடைபெற்ற தொழுநோய்ப் பரிசோதனை முகாம்களில் சம்மாந்துறையில் 09 பேரும், காரைதீவில் 05 பேரும், சாய்ந்தமருதில் 02 பேரும், கல்முனை தெற்கில் ஒருவரும், பொத்துவிலில் ஒருவரும் தொழு நோயாளர்களென இனம் காணப்பட்டுள்ளார்கள்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எல்லைப் பிரிவினுள் தொழுநோயாளரென இனம் காணப்பட்ட 49 பேர்களில் ஆறு பேர் சிறுவர்களென தொழு நோய்த்தடுப்பு வைத்திய நிபுணர் டாக்டர் அலி அக்பர் தெரிவித்தார். தொழு நோய்த் தடுப்பு முகாம்களுக்கும் சிகிச்சைக்குமாக பிதியிஞிணிரிளி நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.
பொத்துவிலில் நடைபெற்ற தொழுநோய் பரிசோதனை முகாமிற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். சமீம், சுகாதாரப் பரிசோதகர்களான எம்.எஸ்.எம். மலிக், எம்.எம். றிவாஸ், எம்.ஏ.ஏ. ஜப்பார் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்