பொது பலசேனாவின் கூட்டம் கல்முனையில் என்பது ஒரு வதந்தி - முதல்வர் சிராஸ் மீராசாஹிப்

பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) கல்முனையில் இடம்பெற உள்ளது என்பது ஒரு வதந்தி என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

மேற்படி கூட்டம் கல்முனை மாநகர எல்லைக்குள் நடைபெற ஏற்பாடாகிவருவதாக சிலர் தெரிவித்தனர். இது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வராகிய நான் பொலிஸாருடன் இணைந்து மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிற்கு சென்று ஆராய்ந்தபோது அவ்வாறான ஒரு ஏற்பாடு இன்றுவரை இல்லை என்பது புலனாகியது.

பல தசாப்த காலமாக யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு தவித்தோம். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அயராத முயற்சியால் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது இதனால் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம் இத்தறுவாயில் கல்முனை மாநகர எல்லைக்குள் இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லுறவை சீர் குலைக்கும் விதத்தில் எவர் செயற்பட்டாலும் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான சகல முயற்சிகளும் மேற்கொள்வதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்