நடை பாதைக்கு தடை கல்முனை பொலிசார் நடவடிக்கை
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை நகரம், கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு பிரதேசங்களின் பிரதான வீதியிலுள்ள வர்த்தகக் கடைகளினால் நடைபாதைகளில்; வைக்கப்பட்டிருக்கும விற்பனைப் பொருட்களை அகற்றும் பணியினை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச வர்த்தக கடைகளினால் நடைபாதைகளில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அகற்றும் பணியினை கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வசந்தகுமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று மேற்கொண்டனர்.
இதன்போது பொலிஸார் வர்த்தக கடைகளின் முன்னுள்ள பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் நடைபதைகளில் பொருட்களை காட்சிப்படுத்தும் வர்;த்தக கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
Comments
Post a Comment