அடுத்த தேர்தலுக்கு முன்னர் விருப்பு வாக்கு முறை நீக்கம்
அரசுக்கு எதிர்க் கட்சிகளின் ஆதரவு அவசியம் அமைச்சர் டலஸ் அடுத்த பொதுத்தேர்தலுக்கு அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் சட்டம் மாற்றப்பட்டு, விருப்பு வாக்குத் தேர்தல்முறை ஒழித்துக்கட்டப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி அவர்களின் இந்த எண்ணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய ஒரு சூழல் இன்று நாட்டில் தோன்றியிருக்கிறது. முல்லேரியா அசம்பாவிதங்களையடுத்து எதிர்க்கட்சியினர் கூட தேர்தல் முறை மாற்றப்பட்டு விருப்பு வாக்கெடுப்புமுறை இல்லாமல் செய்யப்படவேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள் என்று இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்றுக்காலை ‘ஏழாவது மணித்தியாலம்’ என்ற சுயாதீன சேவையின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இன்று நாட்டில் அதிகரித்துவரும் தேர்தல் வன்முறைகளுக்கு பிரதான காரணமாக இந்த விருப்புவாக்கு முறையே இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய டலஸ் அழகப்பெரும, தேர்தல் சட்டத்தை மாற் றியமைப்பதற்கு ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அதன் மூலம் தேர்தல் வன்முறைகளை கணிசமானளவு