சட்டம் ஒரு இருட்டறை நீதி யாருக்கு

கல்முனை மாநகர மேயர் யார் என்பது குறித்த  அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் சாய்ந்தமருது, கல்முனை குடி பகுதிகளில் மக்கள் பெரும் பரபரப்புடன் காணப் படுகின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய விசேட உச்சபீட கூட்டத்தில் மேயர் நியமன தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் எத்தகைய முடிவும் இன்றி அக் கூட்டம் நிறைவடைந்தது.
கல்முனை மாநகர சபை தேர்தலில் அதி கூடிய வாக்குகள் பெற்ற சிராஸ் மீரசஹிப் மற்றும் முதன்மை வேட்ப்பாளர் நிசம் காரியப்பர் ஆகியோருடன் தான் பிரத்தியேகமாக கலந்துரையாடி இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்த ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை மாலை இச்செய்தி எழுதப் படும் வரை அவர்கள் இவருடனான சந்திப்பில் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மக்கள் குழப்பகரமான நிலையில் காணப்படுகின்றனர். நேற்று இரவு இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து சாய்ந்தமருது நகரில் குவிக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிசாரும் இராணுவத்தினரும் இன்னும் பாதுகாப்பு கடைமையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதான வீதியிலும் பொது இடங்களிலும் மக்கள் கூடி நிற்பதற்கு இடமளிக்காதவாறு பொலீஸ் மற்றும் இராணுவத்தினர் கடும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் யாவும் இன்னும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்களின் உத்தியோகபூர்வ அறிவிப்பை மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இருந்த போதிலும் இத் தேர்தலில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை மேயர் பதவிக்கு நியமிக்க தலைவர் ஹகீம்  தீர்மானித்திருப்பதாக கட்சியின் உயர் பீட வட்டார தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்