வேட்பாளர்களின் கடவுட்கள் ,போஸ்டர்கள் பொலிசாரினால் அகற்றப்பட்டு வருகின்றன .


நாளை நடை பெறவுள்ள கல்முனை மாநகர சபை தேர்தலில் குதித்துள்ள வேட்பாளர்களின் கடவுட்கள் ,போஸ்டர்கள் பொலிசாரினால் அகற்றப்பட்டு வருகின்றன .

தேர்தல் ஆணையாளரின் கட்டளை பிரகாரம் இந்த நடவடிக்கை இடம் பெறுவதாக கல்முனை பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் அந்த அதிகாரின் தலைமையில் கல்முனை பிர தேசத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களும்,கட்டப்பட்டுள்ள கட்டவுடுகளும் அகற்றப்படுகின்றன . ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களுக்கு கல்முனை பொலிசார் ஒயில் பூசுவதால் பாடசாலை மற்றும் அலுவலக சுவர்கள் சேதம் அடைவதாக அதிபர்களும், திணைக்கள தலைவர்களும் பொலிசில் முறைப் பாடு செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்