தயா சரணசிறுவர் தின நிகழ்வு
கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “தயா சரண மன்றம்” ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வும், கழியாட்ட நிகழ்வும் நேற்று கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாளை வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வு மாலை 3.00மணி
தொடக்கம் இரவு 10.00 மணி வரை இடம்பெற்று வருகின்றது.
இதில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள்,
வர்த்தக நிலையங்கள், கண்காட்சி கூடங்கள்,
இசை நிகழ்ச்சிக் கூடங்கள் என்பன அமையப் பெற்றுள்ளன.
நேற்று ஆரம்பமான முதல்நாள் நிகழ்வில்
பாராளுமன்ற உறுப்பினர் திருமதி அனேமா கமகே,
கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே,
கல்முனை வலயக் கல்விப்
பணிப்பாளர் எம்.ரி.தௌபீக்,
மதத்தலைவர்கள், இராணுவ உயர்
அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், வர்த்தகர்கள் உட்பட பெரும்திரளான பொது
மக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட சிறுவர்தின கட்டுரை, கவிதை,
ஓவியம் போன்ற பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும்
பாராட்டப்பட்டு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Comments
Post a Comment