கல்முனை மாநகர முதல்வர் யார்? இன்று தீர்மானம்
கல்முனை மாநகர சபை மேயர் யார் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கூடும் கட்சியின் உயர் மட்டக் குழு இவ்விடயம் தொடர்பில் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கல்முனை மாநகர சபைக்கான
தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற முஹம்மட் ஸிராஸ் என்பவரையா அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிஸாம் காரியப்பரையா மேயராக நியமிப்பது என்பது தொடர்பில் குழப்ப நிலையொன்று தோன்றியுள்ளது.
Comments
Post a Comment