Posts

Showing posts with the label காலநிலை

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Image
எதிர்வரும் தினங்களில் ஆழ்கடல் பகுதியில் காலநிலை சீரற்றதாக காணப்படும் என்பதினால் கடற்றொழிலாளர்கள் கடல்நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  எதிர்வரும் தினங்களில் பெரும்பாலான இடங்களில் கடும் மழைபெய்யக்கூடிய காலநிலை காணப்படுகின்றது. எதிர்வரும் 5ஆம் திகதி முதல் இந்த நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நாளை முதல் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்ககூடும். இது அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்ககூடும். இதற்கமைவாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்தல் மற்றும் கடல்நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.  இதேவேளை மலையக பிரதேசங்களில் விசேடமாக மண்சரிவு இடம்பெறக்கூடிய பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும்.  மலைப்பிரதேசப்பகுதிகளில் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகி

நாளை வடக்கு, கிழக்கில் அதிக வெப்பம்!

Image
-நாளை மறுதினம் முதல் மழைக்கான காலநிலை நாளைய தினம் (03) நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை காணப்படலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும், வட மேல், ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் கவனம் செலுத்தக்கூடிய வகையில் அதிக வெப்ப காலநிலை காணப்படும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் அறிவித்துள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையும் அதன் எச்சரிக்கை மட்டமும் 27-38  :  சாதாரணமானது 39-45  :  எச்சரிக்கை மட்டம்  - அதிக நேரம் வெட்ட வெளியில் நிற்றல் மற்றும் வேலைகளில் ஈடுபடுவதன் காரணமாக களைப்பு நிலை ஏற்படலாம். மேலும் வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் அதிக நீரிழப்பு காரணமான தசைப் பிடிப்பு (Heat Cramps) ஏற்படலாம் 46-52  :  அதிக எச்சரிக்கை மட்டம்  - அதிக நீரிழப்பு காரணமான தசைப் பிடிப்பு (Heat Cramps), வெப்ப அதிகரிப்பு காரணமான அதிக களைப்பு (H

காலநிலை மாற்றம்

Image
இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை காணரமாக நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேகமூட்டம் மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சுமார் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி குறிப்பாக தெற்கு , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை பொலன்னறுவை மாவட்டங்களிலும் பெய்யக்கூடும். 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்திற்கும் அதிகமாக குறிப்பாக தென் மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பிரதேசங்களில் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பதிவாகக்கூடும். தென்மேல், தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் இயங்குநிலை மேகக்கூட்டங்கள் காரணமாக களுத்துறையிலிருந்து , காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்க

சூறாவளி தாக்கம் பெரியநீலாவணையில் அகோரம்

Image
நேற்று இரவு  (28) வீசிய மினி சூறாவளியினால் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவணை வீட்டுத் திட்டத்திலுள்ள 400 வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. கிழக்கில் தொடராக நேற்று மழை  பொழிந்து   வேளை  திடீர் என  இரவு  8.45 மணியளவில் ஆரம்பித்த பலத்த காற்று மினி சூறாவளியாக மாறியதால்  இந்த பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.  கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருந்த தொடர்மாடி வீட்டுத் திட்டத்திலேயே இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது. 648 குடும்பங்கள் வாழும் இந்த தொடர்மாடி வீட்டுத் திட்டத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக 03 தொடர்மாடி வீடுகளின் மேல் மாடி கூரைகள் பலத்த காற்றுக்காரணமாக தூக்கி வீசப்பட்டுள்ளன. மின் கம்பிகள் சேதமடைந்துள்ளதனால் மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.இங்கு  குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது. பலருக்கு காயம் ஏற்பட்டு வைத்தியசாலைகளில்  பட்டுள்ளனர் . குழந்தைகளுக்கு பால்மா இன்றி தாய்மார்கள் அங்கு அவதியுறுகின்றனர் . சமைக்க முடியாத நிலையும் அங்கு காணப்படுகின்றது  சம்பவத்தைத் தொடர்ந்து சேதமடைந்த வீடுகளில் தங்கியிருந்த மக்கள் தங

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு

Image
அம்பாறை மாவட்டத்தில் நேற்றிலிருந்து (24) தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதனால் பெரும்போக நெல் அறுவடை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் முழுவதும் அடை மழை பெய்து வருவதனால் மாவட்டத்தின் நெல் அறுவடை  பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தற்போது வரை 50 வீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில் மழை பொழிய ஆரம்பித்துள்ளதால் பெரும்போக  அறுவடையில் பெருந்தடங்கல்  ஏற்பட்டுள்ளதோடு மழை தொடரின் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பாலமுனை நிந்நவூர் சம்மாந்துறை இறக்காமம்,  சடயந்தலாவ சவளக்கடை நற்பிட்டிமுனை  பிரதேச விவசாயிகள் மழைத்தாக்கத்தால் அறுவடைத்தாமதத்தையும்.நஷ்டத்தையும் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போகம் மாத்திரமல்ல கடந்தாண்டுகளில் கூட  அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு  தொடர்ந்தும் இந்நிலை ஏற்பட்டு வருவதை நாம் காணுகிறோம். பல கண்டங்களில் அறுவடையும் குறைந்து நெல்லின்விலையும் குறைந்துள்ள நிலையில் மழையும் பாதிப்பை ஏற்படுத்தின் நெற

வடக்கு,கிழக்கில் 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று கனத்த மழை

Image
வங்களா விரிகுடாவில் தாழமுக்கம் நகர்வு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நகர்ந்ததையடுத்து நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசும் எனவும் கடற் பிரதேசங்களில் கொந்தளிப்பும் 90 முதல் 100 கி. மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. இவற்றினூடான அனர்த்தங்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார். இதுவரை இலங்கையில் சுனாமி ஏற்படுமென்ற சாத்தியக்கூறுகள் பெருமளவில் கிடையாது என்றும் அவ்வாறு ஏற்படுமாயின் மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று(05) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் விளக்கமளித்த அவர்: வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கைக்கு கிழக்கே 900 கிலோ மீற்றர் தூரத்திலேயே தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இது படிப்படியாக பலம் ப

காலநிலை பற்றி அனைவரும் கரிசனையாக இருப்பது அவசியம் - வளிமண்டலவியல் திணைக்களம்

Image
இன்றிரவு முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலநிலை பற்றி கரிசனையாக இருப்பது அவசியமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறித்துள்ளது, தாழமுக்கம் இலங்கையிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவை நெருங்கும் போது இந்த நிலைமை ஏற்படும். காங்கேசந்துறை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதி கொந்தளிப்பாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.எஸ்.எச்.பிரேமலால் தெரிவித்தார்.  மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் காற்றமுக்கம் இலங்கையிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்தை நெருங்கும் போது சில இடங்களுக்கு தாக்கம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    இன்றிரவு முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலநிலை பற்றி கரிசனையாக இருப்பது அவசியமாகும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாண மக்களுக்கு இதன் மூலம் கூடுதலான தாக்கம் ஏற்படலாம். இந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை

மீள அறிவிக்கும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

Image
எதிர்வரும் 24 மணி நேரத்தில் நாட்டை சூழவுள்ள பகுதியிலும், கடல் பகுதியிலும் காற்றின் வேகம் வலுவடையும் நிலை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையிலிருந்து சுமார் 1300 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலையமானது, எதிர்வரும் 24 மணி நேரத்தில் தாழமுக்கமாக மாற்றமடைவதே இதற்கு காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில், குறிப்பாக நாளைய தினம் (05) முதல் நாட்டிலும், நாட்டை சுற்றிய கடற்பிரதேசங்களிலும் விசேடமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்காலப்குதியில் நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, மத்திய ம

வானிலை பற்றி அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்து அமைச்சு அறிவிப்பு

Image
நாளை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.   இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்ட அமைச்சர் வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணித்தியாலங்கள் இயங்கி சகல விடயங்களையும் அவதானித்து வருகின்றன. இதன் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டி இடர் நிலையை தணியச் செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும்;  அமைச்சர் கூறினார்.      அரசாங்கம் காலநிலை பற்றி எதிர்வுகூறியுள்ளது.  எனவே அடிக்கடி விடுக்கப்படும் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.   வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.எஸ்.பிரேமலால் கருத்து வெளியிடுகையில், இலங்கையிலிருந்து ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தொலைவில் அந்தமான் தீவுக்கு அருகில் உருவான காற்றழுத்த மண்டலம் தாழமுக்கமாக மாறக்கூடும் என்றார். இது சூறாவளியாக மாற வாய்ப்பு இருப்பதால் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்புவது அவசியம

வடக்கு-கிழக்கு பிரதேச கரையோர மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் விசேட அறிவுறுத்தல்

Image
வடக்கு கிழக்கு கரையோர கடற்பிரதேசத்தில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று இடர்முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். தற்போது எதிர்பார்க்கப்படும் சீரற்ற காலநிலையின் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவது பாதுகாப்பற்றது என்று  மேலும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சீரற்ற காலநிலையை கரையோரப்பிரதேசத்திலுள்ள மக்களும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோரும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த தகவல்களை பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக சம்பந்தப்பட்ட கரையோர மற்றும் கடற்றொழிலிலாளர் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக வடக்கு இடர்முகாமைத்துவ அதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார். முல்லைத்தீவு பிரதேசத்தில் கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கும் இவ்வாறான   அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் நாளை முதல் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர

காலநிலை- தாழமுக்க நிலை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலுவடையக்கூடும்

Image
நாட்டிலிருந்து 1300 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 3-4 தினங்களில் இந்த தாழமுக்க தாழ்வு நிலை இந்த கட்டமைப்பின் மேற்குப்பகுதியில் வடமேல் திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்காள விரிகுடாவில் கடற்பிரதேசத்தின் ஊடாக வடக்கு தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா பிரதேச கரையை நோக்கி நகரக்கூடும். இதற்கமைவாக எதிர்வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் இலங்கைக்கு கிழக்கு திசையில் இந்த கட்டமைப்பு நாட்டிற்கு அருகாமையில் நகரக்கூடும். எதிர்வரும் சில தினங்களில் விசேடமாக நாளை முதல் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தலும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் . மேலும் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 90 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரையிலும் நாட்டை சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரையிலும் நாட்டிற்குள் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் 50

வங்காளவிரிகுடாவில் மற்றுமொரு தாழமுக்க தாழ்வு நிலை

Image
வங்காளவிரிகுடாவில் மற்றுமொரு தாழமுக்க தாழ்;வு நிலை ஏற்படக்கூடிய நிலைமை இருப்பதாக வளிமண்லவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.எம்.எஸ்.பிரேமலால் எதிர்வு எதிர்வு கூறியுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் நாட்டுக்கு அருகாமையில் இந்த குறைந்த தாழமுக்க தாழ்வு நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.   இதன் நகர்வுக்கு அமைவாக எதிர்வரும் தினங்களில் மழை மற்றும் காற்று நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடும்.   இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கல்முனை தமிழ் பிரதேசத்தை கல்முனை மாநகர சபை புறக்கணிக்கிறதா ?

Image
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை-01 வைத்தியசாலை குறுக்கு வீதி கல்முனை நீதி மன்றம் ,தொலைத் தொடர்பு திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கல்முனை பொதுச் சந்தைக்கு  பொது மக்கள் பயன்படுத்தும் குறுக்கு வழி வீதியாகும் . இவ் வீதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து செய்வதில் கஸ்டத்தையும் டெங்கு ஆபத்தையும் எதிர் நோக்கியவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வீதியானது கல்முனை மாநகர சபையினால் பராமரிக்கப்படுகின்ற போதிலும் பல வருடமாக மாநகர சபை கவனிக்காமல் விட்டதனால் குன்றும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர். மேலும் மழைகாலம் ஆரம்பித்துள்ளதனால் இந்த வீதியின் அருகாமையில் அமைந்துள்ள வடிகான் நீண்டகாலமாக துப்புரவு  செய்யப்படாமயால் நீர் தேங்கி காணப்படுகின்றது. இதனால் இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வடிகான் சீர் இன்மையால் வெற்றுக் காணிகளில் நீர் தேங்கி காணப்படுவதுடன் குப்பை கூழங்களும் கொட்டப்பட்டு வருகின்றன இதனால் நுளம்பு பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பாக உள்ளது. எனவே இந்த விடயத்தை கல்முனை மாநகர சபை

'ஒகி' சூறாவளியின் அழுத்தம் இலங்கையைவிட்டு இன்னும் முழுமையாக நீங்கவில்லை

Image
'ஒகி' சூறாவளியின் அழுத்தம் இலங்கையைவிட்டு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இன்றும் நாளையும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையை எதிர்பார்க்க முடியும் என்று எதிர்வு கூறியுள்ளது.    நாட்டைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்திலும் நாட்டிலும் தொடர்ந்து கடும் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென்மாகாண பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் கடற்தொழிலாளர்கள் இன்றையத் தினம் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.    இதேவேளை இலங்கையிலிருந்து நகர்ந்து செல்லும் 'ஒகி' சூறாவளியின் தாக்கம் இந்தியாவை பாதித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் கடும் மழைப் பெய்து வருகிறது.   வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. கடுங்காற்றின் காரணமாக மரங்கள் பல முறிந்துள்ளன. இந்த சம்பவங்களினால் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற் போன மீனவர்களைக் கண்டுப்பிடிப்பதில் ஐந்து கப்பல்க

சீரற்ற காலநிலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11

Image
சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11அதிகரித்துள்ளது.  மாத்தறை கம்புறுப்பிட்டிய பலோப்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு விழுந்தமையினால் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீரற்ற காலநிலையினால் 55 பேர் காயமடைந்துள்ளனர். 5 பேர் காணாமல்போயுள்ளனர;.     14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.     சீரற்ற காலநிலை காரணமாக 30 படகுகள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது

திடீர் அனர்த்தம் : அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள்......

Image
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை வழங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு    1902   என்ற  அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.  இந்த தொலைபேசி  இலக்கத்தின் மூலம் அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு தகவல்களை பெற முடியும்.    அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் பணிப்புரைக்கு அமைய நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் மாவட்ட பிரதேச செயலாளர்களின் ஊடாக முன்னெடுக்கப்பட இருக்கின்றன.    தொடர்ந்து மழை பெய்வதால் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயமும் காணப்படுகிறது.  இவ்வாறான விடயங்கள் பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமைச்சர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.    வீடுகளுக்கோ சேதம் ஏற்பட்டிருப்பின் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக அது பற்றி அறிவிக்குமாறு அமைச்சர் மக்களை கேட்டுள்ளார்.    மின்சார துண்டிப்பு தொடர்பாக தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.  1987  என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மின்சார சபையை தொடர்பு கொள்ள முடியும்.    இலங்கை தனியார் மின்சார நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம் 1910 ஆகும். 1901 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் வலுசக்தி அமைச்சுக்கு

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

Image
நாட்டில் தற்சமயம் நிலவும் வலுவான காற்றுடன்கூடிய அடைமழையினால் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். காலி கம்பஹா பதுளை மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் இடமபெற்றுள்ளன.   13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நான்காயிரத்து 886 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆகும்.     இதுவரை ஐந்து பேர் காணாமற்போய்யுள்ளனர். 202 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.   பகுதியளவில் 3 ஆயிரத்து 236 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. ஒன்பது பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு;ள்ளன. இவற்றில் 179 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 36 பேர் இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.     இதேவேளை நுவரெலியா பிரதேசத்தில் 14 கிராமங்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு;ளளன. இங்கு 51 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மண்சரிவினால்,42 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என;று நுவரெலியா பிரதேச செயலாளர்  தெரிவித்தார்.  

காலநிலைநாட்டில் பொரும்பாலான மாகாணங்களில்மழை

Image
நாட்டில் பொரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையோரங்களின் பல பகுதிகளில்; காலை வேளைகளில் மழை பெய்யும். நாட்டில் சுமார் 100 மில்லமீற்றர் மழை குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக்கூடும். மேற்கு , வடமேற்கு , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையில் காற்று வடகிழக்கு திசையில் வீசுவதுடன் காற்றின் வேகம் 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தை கொண்டதாக இருக்கும். நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 10 முதல் 20 கிலோமீற்றர் வேகத்தினை கொண்டதாக காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வரையிலான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 40 முதல் 45 கிலோமீற்றருக்கு அதிகமான வேகததில் வீசும். இடியுடன் கூடிய மழையின் போது இப்பிரதேசத்தில் தற்காலிகமாக 70 முதல் 80 கிலோமீற்றர்

மருதமுனை அக்பர் கிராமத்தில்அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்)  தேசிய சுனாமி அனர்த்த வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள மருதமுனை, பெரியநீலாவணை,அக்பர் கிராம பிரதேச மக்களுக்கான அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு  நேற்று (05-11-2017)அக்பர் கிராம முன்னெச்சரிக்கை கோபுரத்திற்கருகில் 2.00 மணி தொடக்கம் 3.15மணிவரை நடைபெற்றது. இங்கு முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.இதில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களும்வி,ஷேட அதிரடிப்படையினரும்கடற்படையினரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை

Image
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் நாளை முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டம் நிலவும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.  திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்நறுவை, அம்பாறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர்களை தாண்டிய மழைவீழ்ச்சி பதிவகலாம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.