சூறாவளி தாக்கம் பெரியநீலாவணையில் அகோரம்

நேற்று இரவு  (28) வீசிய மினி சூறாவளியினால் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவணை வீட்டுத் திட்டத்திலுள்ள 400 வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கிழக்கில் தொடராக நேற்று மழை  பொழிந்து   வேளை  திடீர் என  இரவு  8.45 மணியளவில் ஆரம்பித்த பலத்த காற்று மினி சூறாவளியாக மாறியதால்  இந்த பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருந்த தொடர்மாடி வீட்டுத் திட்டத்திலேயே இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.

648 குடும்பங்கள் வாழும் இந்த தொடர்மாடி வீட்டுத் திட்டத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக 03 தொடர்மாடி வீடுகளின் மேல் மாடி கூரைகள் பலத்த காற்றுக்காரணமாக தூக்கி வீசப்பட்டுள்ளன. மின் கம்பிகள் சேதமடைந்துள்ளதனால் மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.இங்கு  குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது. பலருக்கு காயம் ஏற்பட்டு வைத்தியசாலைகளில்  பட்டுள்ளனர் . குழந்தைகளுக்கு பால்மா இன்றி தாய்மார்கள் அங்கு அவதியுறுகின்றனர் . சமைக்க முடியாத நிலையும் அங்கு காணப்படுகின்றது 

சம்பவத்தைத் தொடர்ந்து சேதமடைந்த வீடுகளில் தங்கியிருந்த மக்கள் தங்களது வீடுகளில் இருந்த வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

சுமார் 2மணி நேரம் வீசிய பலத்த காற்றினால் இந்தப் பிரதேசத்தின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அம்பாறை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும், கல்முனை தமிழ் பிரிவு  பிரதேச செயலகமும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது