வங்காளவிரிகுடாவில் மற்றுமொரு தாழமுக்க தாழ்வு நிலை
வங்காளவிரிகுடாவில் மற்றுமொரு தாழமுக்க தாழ்;வு நிலை ஏற்படக்கூடிய நிலைமை இருப்பதாக வளிமண்லவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.எம்.எஸ்.பிரேமலால் எதிர்வு எதிர்வு கூறியுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் நாட்டுக்கு அருகாமையில் இந்த குறைந்த தாழமுக்க தாழ்வு நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இதன் நகர்வுக்கு அமைவாக எதிர்வரும் தினங்களில் மழை மற்றும் காற்று நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடும்.
இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment