Posts

Showing posts with the label ஆய்வு

ஊடகவியலாளரும் ஆசிரியருமான மருதமுனை ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு “சிறந்த இளம் இலக்கிய விமர்சகர் விருது”

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) ஊடகவியலாளரும் ஆசிரியரும் இலக்கிய மதிப்பீட்டாளருமான மருதமுனை ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு “சிறந்த இளம் இலக்கிய விமர்சகர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும்  கனடா படைப்பாளிகள் உலகமும், தடாகம் கலை இலக்கிய வட்டமும் ஒன்றிணைந்து எழுத்தாளர் கலை மகள் ஹிதாயா றிஸ்வியின் ஒருங்கிணைப்பில் திருகோணமலை சன்சைன் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(15.12.2015) இடம்பெற்ற பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு மற்றும் துறைசார் விருது வழங்கும் நிகழ்விலேயே இவருக்கான விருது வழங்கப்பட்டது. இலங்கையில் வெளிவரும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடகவியலாளராக பணியாற்றிவரும் ஜெஸ்மி மூஸா அலிஸ் ஊடக வலையமைப்பின் பிரதம நிருவாக ஆசிரியராகவும் பணியாற்றுகிறார் தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ் விசேட துறையில் விசேட பட்டம் பெற்று முதுகலை மாணியைப் பூர்த்தி செய்துள்ளதுடன் ‘ஈழத்துச் சிறுகதைகளில் தனியாள் ஆளுமை” தொடர்பில் முதுகலை தத்துவ மாணிக்கான ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார் இலக்கியத்தில் கல்முனைப் பிரதேச தமிழ்-முஸ்லிம் உறவு ,கல்முனைப் பிரதேச போர்ச் சூழல் கவிதைகள்-இஸ்லாமிய இலக்கியப

“அறிஞர் ஜெமீலுக்கு கௌரவ கலாநிதி வழங்கப்படாமை ஒரு வரலாற்றுத் தவறாகும்”

Image
சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி அஷ்செய்க் ஜலால்தீன் (பி.எம்.எம்.ஏ.காதர்) “அண்மையில் காலஞ்சென்ற அறிஞரும்,பன்னூல் ஆசிரியரும் சிறந்த நிர்வாகியுமான அல்-ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல், கிழக்கிலங்கை தந்த மிகச் சிறந்த ஆய்வாளரும்,பேச்சாளரும்,மனிதப் பண்புகளை அணிகலனாகக் கொண்டவருமாவார்.என தென்கிழக்குப் பல்கலைக்கழக ,சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி. எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் அண்மையில் காலம் சென்ற இலங்கை முஸ்லிம் அறிஞரும், பன்னூல் ஆசிரியரும் முஸ்லிம் சமய கலாசார விவகார முன்னாள் செயலாளருமான சாய்ந்தமருது எஸ்.எச்.எம். ஜமீல் அவர்களின் நினைவு  தின உரையும் அவரின் ஆக்கங்கள், வாழ்க்கை நினைவுகள் பற்றிய கண்காட்சியும் அண்மையில் இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின்  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  அங்கு அறிமுக உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  பீடாதிபதி எஸ்.எம்.எம்.மஷாஹிர்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உப வேந்தர் பேராசிரியர்  எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக்  கலந்துகொண்டார் . இங்கு சிரேஷ்ட வ

மர்மப் பொருளால் 13 ஆம் திகதி விமானம் பறக்கவும், மீன் பிடிக்கவும், தடை..?

Image
விண்வெளியில் இருந்து WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ம் நாள், வெள்ளிக்கிழமை விழும் என்று எதிர்பார்க்கப்படும், இலங்கையின் தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படும், 2 மீற்றர் நீளமான – WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ம் நாள் இலங்கைக்குத் தெற்கில், 100 கி.மீ தொலைவில், கடலில் விழும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 13ம் நாள் வெள்ளிக்கிழமை, உள்ளூர் நேரப்படி, காலை 11.48 மணியளவில், கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மர்மப் பொருளினால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படாது என்றும், அது வளிமண்டலத்துக்குள் நுழையும் போது பெரும்பாலும் நடுவானிலேயே எரிந்து போய் விடும் சாத்தியம் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் துறைத் தலைவர் கலாநிதி சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை, சிறிய துண்டுகள் நிலத்தில் விழுவதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது என்று ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின், மூத்த ஆய்வாளரான வி

தென்கிழக்குப் பல்கலையில் அறிஞர் மர்ஹூம் ஜமீல் நினைவு தின உரையரங்கு!

Image
தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் அண்மையில் காலம் சென்ற இலங்கை முஸ்லிம் அறிஞரும், பன்னூல் ஆசிரியரும் முஸ்லிம் சமய கலாசார விவகார முன்னாள் செயலாளருமான சாய்ந்தமருது எஸ்.எச்.எம். ஜமீல் அவர்களின் நினைவு தின உரையும் அவரின் ஆக்கங்கள், வாழ்க்கை நினைவுகள் பற்றிய கண்காட்சியும் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி பி.ப 2 மணிக்கு பீட கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியக் கற்கை அரபுமொழி பீடாதிபதி அஷ் ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்; பல்கலைக்கழக உபவேந்தர்; பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். பேராதனைப்பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் துறை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அறிஞர் ஜமீல் பற்றிய நினைவுரையை நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்வு பற்றிய அறிமுக உரையை முதுநிலை விரிவுரையாளர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் வழங்குவார். தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரஃப் ஞாபகார்த்த நூல் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறிஞர் ஜமீல் அவர்களின் நூல்கள் தொகுப்புக்கள், அன்னாரின் வாழ்க்கை, வரலாறு, உரைகள் அடங்கிய

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு

Image
இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை இன்று காலை 9 மணியளவில் மக்கள் பார்வைக்காக காத்தான்குடியில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் வரை, குறித்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. நூதனசாலையின் உத்தியோகபூர்வ திறப்பு விழா ஜனாதிபதி தலைமையில் வெகு விரைவில் நடைபெறவுள்ளமை குறுப்பிடத்தக்கது. கலாச்சார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் வழிகாட்டலில் பல மில்லியன் ரூபாய் செலவில் 4 மாடிகளுடன் இந்த நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவு பழக்க வழக்கங்கள், வியபாரா முறைகள், புராதன பள்ளிவாயல்கள், முதலாவது வுளு செய்த இடம் உட்பட பல நூறு முஸ்லிம் சமூகம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன. இன்று காலை இடம்பெற்ற உத்த

கவிஞ்சர் அபாருடனான இலக்கிய நேர்காணல்

Image
1990களின் பிற் பகுதியில் கிழக்கு மண்ணில் இருந்து புதுமை தன்மையுடன்  கவிதை எழுதி வரும்  "இடி விழுந்த வம்மி" கவிதை தொகுதியின் ஆசிரியருமான  கவிஞ்சர்  அபாருடனான  இலக்கிய நேர்காணல் ஓன்று சனிக்கிழமை வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம்  நிகழ்ச்சியில் காலை 10.15க்கு  ஒளிபரப்பு  செய்யப் படவுள்ளது. இந்த நேர்காணலை சிரேஷ்ட அறிவிப்பாளர் நாகபூசணி நிகழ்த்தவுள்ளார் .

மருதமுனை நவ்பல் கல்முனை DS இன் புத்தக வெளியீடு

Image
கல்முனை பிரதேச செயலாளர் முஹம்மது தம்பி முஹம்மது நௌபல் எழுதிய பிரதேச செயலகங்களினால் வழங்கப்படும் சேவைகள் (பொதுமக்களுக்கு அவசியமான ஒரு வழிகாட்டி) மற்றும் மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியின் வரலாறு ஆகிய இரு நூல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிகழ்வு மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. கவிஞரும் நிர்வாக உத்தியோகத்தருமாகிய எம்.வீ. அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல் -  மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா, விரிவுரையாளர் சத்தார் எம். பிர்தௌஸ், அதிபர் ஏ.ஆர்.ஏ. நிஹ்மத்துல்லா, ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமட் ஆகியோர் இந்த நூல்கள் பற்றிய கருத்துரைகளை வழங்கியதுடன் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலைத்துறை சார் ஆர்வளர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்!

Image
இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நாளை 22ம் திகதி வியாழனன்று சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. இந்த செயற்கைக் கோள் சீனாவின் சீசாங் ஏவுதளத்திலிருந்து நாளை பிற்பகல் 3.30 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்- அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியிலுள்ள பல்லேகலவில் அமைக்கப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதும்- உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது. தெற்காசியாவில் இந்தியா- பாகிஸ்தானுக்கு அடுத்ததாக- சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டுள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெறும்.

13வது திருத்தச் சட்டத்திற்குப் பதிலாக உருவாகும் 19ம் திருத்தச் சட்டம்

  By: M.I.M.S. Anwar gpujk ePjpaurH rpwhzp gz;lhuehaf;fhitg; gjtp ,wf;Ftjw;fhd cj;juT gj;jpuk; ghuhSkd;wj;jpy; rku;g;gpf;fg;gl;L ,f;Fw;wg; gj;jpuj;ij tprhupg;gjw;fhf 9 ghuhSkd;w cWg;gpdHfisf; nfhz;l njupTf; FO mikf;fg; gl;Lf; nfhz;bUf;Fk; ,e;epiyapYk; ntypf;filr; rpiwr;rhiyapy; fyfk; Vw;gLj;jg;gl;L 27 NgH nfhy;yg;gl;Lk; 70w;Fk; mjpfkhNdhH fhaKw;WKs;s gpd;dzpapYk; muR 13tJ jpUj;jr; rl;lj;jpw;Fg; gjpyhf 19tJ jpUj;jr; rl;lnkhd;iwg; ghuhSkd;wj;jpy; rkHg;gpf;ftpUg;gjhf vjpHf;fl;rpj; jiytH uzpy; tpf;fpukrpq;f Fw;wk; Rkj;jpAs;shH. jkpo; - rpq;fs ,df;fytuk; cr;rf; fl;lj;jpypUe;jNghJ ,t;tpU jug;gpdUf;Fkpilapyhd Kuz;ghl;ilj; jPHg;gjw;fhd xU mbg;gilj; jPHkhdkhfNt 13tJ jpUj;jr; rl;lk; ,e;jpahthy; ,yq;iff;F mwpKfg; gLj;jg;gl;lJ. md;iwa epiyapy; tpUk;gpNah tpUk;ghkNyh ,ijNaw;W rl;l%ykhf;f Ntz;ba flg;ghL ,yq;if murpw;fpUe;jJ vd;gJk; ,dthj fLk;Nghf;Fr; rpq;fstHfs; kj;jpapy; ,jw;F vjpHg;G ,Ue;jJ vd;gJk; ahtUk; mwpe;j cz;ik. ,dthjf; fl;rpfSf;Fk; mf;fl;rpfis cs;slf;fpa murpw;Fk; jq;fSila Fwp

செல்வாக்கு சரிந்து வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Image
By: M.I.M.S. Anwar இலங்கையில் கடந்த காலங்களில் அதாவது 1983ம் ஆண்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின்னர் அரச-தமிழ் தரப்பினர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சு வார்த்தைகளில் இந்நாட்டு முஸ்லிம்களைப் பிரதிநிதிப்படுத்தவோ அல்லது அவர்களின் குறை நிறைகளை அவ்வாறான பேச்சு வார்த்தைகளில் முன் வைக்கவோ அவர்களுக்கென ஒரு கட்சி இல்லாதபோதுதான் ஒரு முஸ்லிம் கட்சியின் அவசியம் உணரப் பட்டது. இதைத் தொடர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருப்பெற்று இங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் அதிக செல்வாக்கையும் பெற்றது. “பிழையான வழியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செல்லுமாயின் என்னையும் அழித்து எனது கட்சியையும் அழித்துவிடு இறைவா” என்று கட்சியின் மறைந்த தலைவர் மர்ஹ_ம் அ~;ரப் அவர்கள் கூறியதை தலைவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக் கொண்டீருக்கும் ஒருவரிடம் சொன்ன போது அவர் நான் தெரிவித்த அக்கூற்றுக்கு ஒரு சிறு மாற்றம் செய்து “எங்களையும் அழித்து இக்கட்சியையும் அழித்து விடு இறைவா” என்றுதான் தலைவர் கூறியதாகத் தெரிவித்தார். எது எவ்வாறிருப்பினும் இக்கட்சியின் ஸ்தாபகர் மர்ஹ_ம் ஆ.ர்.ஆ. அ~;ரப் அவர்கள் மரித்ததன் பின்னர்

மைக்கல் ஜக்சன் பயன்படுத்திய பொருட்கள் ஏலம்

Image
மைக்கல் ஜக்சனின் இறுதி நாட்களில் பயன்படுத்திய பொருட்கள், அமெரிக்காவில் அடுத்த மாதம் ஏலம் விடப்பட இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- மைக்கல் ஜக்சன், தனது இறுதி நாட்களில் பயன்படுத்திய பொருட்களை, அடுத்த மாதம் 12 ம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளோம். டிசம்பர் 17 ஆம் திகதி, இதற்கான ஏலம் நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் ஜக்சன் மரணமடைந்த படுக்கை அதிக ஏலத்திற்கு விலை போகும் என்று எதிர்பார்க்கப் படுவதாக கூறப்பட்டுள்ளது.

எடின்பரோ கோமகன் விருது ” க்கான மூன்று நாள் களஆய்வுப்பயணம்.

Image
“ எடின்பரோ கோமகன் விருது ”  க்கான மூன்று நாள் களஆய்வுப்பயணத்தை கல்முனையில் இருந்து 38 இளைஞர்கள் நேற்று திங்கள் கிழமை மாலை பயணமாகினார்கள். மேற்படி விருதைப் பெற்றுக்கொள்வதற்காக கல்முனை தீனத் இளைஞர் கழகத்திலிருந்து 38 இளைஞர்கள் பொத்துவில் கொட்டுக்கல் எனுமிடத்திற்கு கள ஆய்விற்காக சென்றுள்ளனர். இவர்கள் அங்கு முகாமிடல். பிரதேசம் பற்றிய ஆய்வு. காலை பகல் உணவுகளை தயாரித்தல் போன்ற பயிற்சிகளையும் பெறவுள்ளனர். இப்பயணத்தை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு கல்முனை இக்கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகரும்  மாநகர பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயளாலருமான நிசாம் காரியப்பா்  தனது இல்வலத்தில் வைத்து அறிவுரை கூறி வாழ்தி வழியனுப்பி வைத்தார்.  இந்நிகழ்வில் தீனத் அமபை்பின் முன்னால் தலைவர் எம்.வை.எம்.முஜிபுடீன் மற்றும் ஊடகவியளாலர் எஸ்.எம்.எம்.றம்ஸான் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.

ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன்?

Image
முஸ்லிம்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன்? 2002ஆம் ஆண்டு முதல் 2009 ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்களை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கற்றுக் கொண்ட பாடங்களும், அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றினை நியமித்துள்ளார். இவ்வாணைக்குழு நாட்டின் பல பாகங்களுக்கும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாணைக் குழுவின் விசாரணைக்காக விதிக்கப்பட்டுள்ள கால எல்லையினை கருத்திற் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியை வெளியிட்டதுடன் அதன் முன் சாட்சியமளிப்பதுமில்லை எனவும் அறிவித்தது விரிவாக பார்க்க இதேவேளை மற்றைய முஸ்லிம் கட்சிகள் இவ்வாணைக்குழு பற்றி எந்தவொரு சாதக பாதகக் கருத்துக்களையும் வெளியிடவில்லை. 2002ஆம் ஆண்டு முதல் 2009 ஜூன் என்ற கால எல்லை இலங்கையின் அரசியல் பிணக்குகளின் வரலாற்றில் மிகக் குறுகியதொன்றாகும். அதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் அதிருப்தியானது நியாயமானதாகும். 19

தேர்தல் முடிவுகள் : சிறுபாண்மை பிரதிநிதித்துவம் வீழ்சி கண்டுள்ளது.

விகிதாசார முறையின் கீழ் 7ஆவது பாராளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் 20 தேர்தல் மாவட்ட முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகிவிட்டன. இம்முடிவுகளின்படி ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு 117 ஆசனங்களும், ஐ.தே. முன்னணிக்கு 46 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 12 ஆசனங்களும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 05 ஆசனங்களும் கிடைத்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மொத்தம் 196 பிரதிநிதிகளுள் 180 பிரதிநிதிகள் மேற்குறிப்பிட்ட அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளனர். தேர்தல் முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள 34 வாக்கெடுப்பு நிலையங்களிலும், திருகோணமலையில் அமைந்துள்ள 01 வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதையடுத்து அகில இலங்கை ரீதியான பெறுபேறுகள் மற்றும் தேசியபட்டியல் பிரதிநிதிகள் விப

குழந்தைகளை அதிகமாக கொலை செய்யும் நாடுகள் பட்டியல் இடபட்டால் அமெரிக்காதான் முதல் இடத்தை பிடிக்கும்

Image
அமெரிக்க ஆக்கிரமிப்பு படையின் டோன் விமானங்கள் மூலம் அத்துமிறி பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் தொடர்ந்தும் தாக்கி முஸ்லிம்களை தனது பாசிச வேட்டை பற்களால் கொடுரமாக கொன்று இரத்தமும் சதையுமாக குவித்து வருகிறது இங்கு கொலை செயபடுபவர்கள் பெண்களும் , எதுவும் அறியாத குழந்தைகளும்தான் அதிகம் அமெரிக்க பாசிச நகரங்களில் ஒரு குழந்தை தவறி விழுந்து விட்டால் ஒப்பாரி வைக்கும் அமெரிக்க , ஐரோப்பிய மாஸ் மீடியாக்கள் இங்கு பிச்சு தூக்கி எறியப்பட்டு சதை வேராகவும் எலும்பு வேராகவும் குவிக்கப்படும் குழந்தைகளை அமெரிக்க பாசிச தேசத்தை நிலை நிறுத்த தேவையான உரமாக பார்கிறது . பாகிஸ்தானின் வட மேற்கு பகுதிகளில் பழங்குடியினர்தான் அதிகம் இங்கு கொலை செயபடுபவர்கள் மிகவும் அதிகம் இந்தப் பகுதியில் முழுநாளும் பாசிச பயங்கரவாத அமெரிக்க இராணுவத்தின் பல ஆளில்லா விமானங்கள் உளவு பார்க்கின்றன கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தி தினமும் பலரை கொலை செய்கின்றன ஆனால் அவைகளில் சில தாக்குதல்கள் பற்றிய செய்திகள்தான் வெளிவருகின்றன அதுவும் பயங்கரவாதிகள் தாக்கப்பட்டார்கள் என்ற தலைப்புடன், அமெரிக்க பாசிசத்தின் கண்களுக்கு முஸ்லிம்கள் அனைவரும்

மீண்டும் வேண்டாம் தமிழ் இனவாதம்

Image
கல்முனை நகரம் தமிழர்களின் பாரம்பரிய நகரம் என்றும், அதை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்றும் பொய்யான திட்டமிட்ட முறையில் தமிழ் இனவாதத்தை கிளப்பி அரசியல் லாபம் தேட ஒருசில இனவாத அரசியல்வாதிகள் புறபட்டுள்ளனர் இக்கூற்றை பொய்யென நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன. இக் குற்றச்சாட்டுக்கள் ஒருசில இனவாத தமிழ் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு சொந்த லாபங்களுக்காக பரப்பப்பட்டு வருகிறது இது தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு கிழ்த்தரமான செலாகும். வரலாற்றுப் பின்னணி தெரியாத இக்கூற்றை பொய்யென நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்பது அவர்களுக்கு நன்றாக தெறியும். தகவல்-கல்முனை அப்துல்லாஹ் இது பற்றிய மேலும் ஒரு கட்டுரை : கல்முனை நகரம் தமிழர்களின் பாரம்பரிய நகரம் என்றும், அதை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டு வருவது இனங்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு இழி செலாகும். அவர்களின் வரலாற்றுப் பின்னணி தெரியாத இக்கூற்றை பொய்யென நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன. கல்முனை முதலாம் வட்டாரத்த

சொந்த இடங்களுக்கான குடியமர்வு – மீள் வரவு- நல்வரவாக அமையுமா?

Image
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அகதி முகாம்களில் அல்லல்படும் இலங்கையின் வடக்கு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கிலான முஸ்லிம் அகதிகளை மீள் குடியமர்த்தும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இந்த உள்ளக இடப் பெயர்வுக்குள்ளாகியுள்ள மக்கள் அக்டோபர் 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் , மன்னார் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் , முல்லைத்தீவு மற்றும் வவுனியாவின் சில பகுதிகளில் வெளியேறும்படி தமிழீழ விடுதலை புலிகளினால் நிர்ப்பந்திக்கப்பட்டனர் . சர்வதேச பிணக்குகள் குழுமத்தின் (International Crisis Group) தகவல்களின்படி , சுமார் 75, ௦௦௦ வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தப்பித்து வவுனியா , அனுராதபுரம் மற்றும் வடமேல் கரையோரப் பகுதியில் உள்ள புத்தளம் மாவட்டம் ஆகிய பகுதிகளை வந்தடைந்தனர் . மீள்குடியமர்வு மற்றும் மீள் நிவாரணப் பணிகளுக்குமான அமைச்சர் ரிசாத் பதியுதீன் , டிசம்பர் 2009 இல் 100,000 முஸ்லிம் அகதிகளை அவர்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தும் வேலைகளை அரசாங்கம் தொடங்குவதாக அறிவித்த