மீண்டும் வேண்டாம் தமிழ் இனவாதம்
கல்முனை நகரம் தமிழர்களின் பாரம்பரிய நகரம் என்றும், அதை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்றும் பொய்யான திட்டமிட்ட முறையில் தமிழ் இனவாதத்தை கிளப்பி அரசியல் லாபம் தேட ஒருசில இனவாத அரசியல்வாதிகள் புறபட்டுள்ளனர் இக்கூற்றை பொய்யென நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன. இக் குற்றச்சாட்டுக்கள் ஒருசில இனவாத தமிழ் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு சொந்த லாபங்களுக்காக பரப்பப்பட்டு வருகிறது இது தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு கிழ்த்தரமான செலாகும். வரலாற்றுப் பின்னணி தெரியாத இக்கூற்றை பொய்யென நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்பது அவர்களுக்கு நன்றாக தெறியும்.
தகவல்-கல்முனை அப்துல்லாஹ்
இது பற்றிய மேலும் ஒரு கட்டுரை :
கல்முனை நகரம் தமிழர்களின் பாரம்பரிய நகரம் என்றும், அதை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டு வருவது இனங்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு இழி செலாகும். அவர்களின் வரலாற்றுப் பின்னணி தெரியாத இக்கூற்றை பொய்யென நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன.
கல்முனை முதலாம் வட்டாரத்தில் வாடி வீட்டுத் தெருவில் ‘பிசர்’ என்னும் பெயருடைய ஒரு ஆங்கிலேயன் அரசாங்கத்திடமிருந்த 38 ஏக்கர் காணியை வாங்கி அதில் தெங்குப் பயிர் செய்கையை 50 ஆண்டுகளாகச் செய்த பின் அவனிடம் மனேஜர் வேலை பார்த்து வந்த இராஜநாயகம் என்னும் தமிழருக்கு அதனை நன்கொடையாகக் கொடுத்து விட்டு தனது தாய் நாட்டிற்குப் போய் விட்டார்.
பின்னர் இராஜநாயகத்திடமிருந்தும், அவரது பின்னுருத்தாளிகளிடமிருந்தம் காலத்துக்குக் காலம் தகுந்த விலைகளைக் கொடுத்து வாங்கிய பூமிகளிலேயே இன்று முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வரலாற்றுப் பின்னணிகொண்ட காணியைத்தான் முஸ்லீம்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் எனக் கதைகட்டி வருகின்றார்கள். இவ்வாறான சட்ட பூர்வமான நிலக் கொள்வனவை ‘ஆக்கிரமிப்பு’ என்றால் கண்டி, கொழும்பு போன்ற நகரங்களில் தமிழர்கள் காணி பூமி, தோட்டங்கள் என்று சட்டபூர்வமாகக் கொள்வனவு செய்துள்ளார்களே.. அதை எவ்வாறு அழைப்பது?
தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் – 1967
கல்முனையில் மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வந்த முஸ்லிம் மீனவர்கள் குடிப் பெருக்கம், தொழில் விருத்தி காரணமாக கல்முனை கடற்கரையில் வாடிவீட்டை அண்மிய அரச இடத்தில் குடிபெயர்ந்தனர். அன்றைய அமைச்சராக இருந்த சி.பி.டி. சில்வா அவர்களால் இக்குடியிருப்பாளர்களுக்கு காணி உத்தரவுப் பத்திரங்கள் வழங்குமாறு அரசாங்க அதிபருக்கு ஆணையும் வழங்கப்பட்டது. அரசாங்க அதிபரும் அனுமதி வழங்கி விட்டார். அப்பாவி ஏழை முஸ்லிம் மீனவர்கள் தாம் குடியிருந்த நிலத்தில் தமது நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தனர். அப்போது கல்முனைப் பொலிசின் பொறுப்பதிகாரியாக நடராசா எனும் ஒரு தமிழரே கடமை செய்து கொண்டிருந்தாh.
கல்முனைப் பொலிசின் உதவியுடன் கல்முனை டி.ஆர்.ஓ.வும் கிராம சேவையாளரும் இது ஒரு இனரீதியான குடியேற்றம் எனக் குற்றஞ்சாட்டி நூற்றுக்கணக்கான ஏழை முஸ்லிம் மீனவர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அடைத்து வைத்தனர். பல நாட்களின் பின்னர்; நீதிபதியால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சில வாரங்களின் பின்னர் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. முஸ்லிம் மீனவர்களுக்கு நீதி வழங்கப்பட்டாலும் சில இனவாதிகளுக்கு பொறுக்க முடியவில்லை. 1967ம் ஆண்டு சித்திரைப் பெருநாளன்று அனைத்துக் குடிசைகளையும் அவர்கள் கொள்ளையடித்துவிட்டு தீயிட்டு நாசமாக்கினார்கள்.
இக்கலவரம் சுமார் ஒரு மாதம் நீடித்தது. ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டார். பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார்கள். இந்தக் கொடுமையால் ஆத்திரமடைந்த முஸ்லிம்களில் சிலர் கல்முனைக்குடிக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையில் வாழ்ந்த பறையாவட்டைத் தமிழர்களைத் தாக்கினார்கள். அவர்கள் பாதுகாப்பின் காரணமாக காரைதீவு, சம்மாந்தறை, பாண்டிருப்பு, கல்முனை போன்ற பக்கத்துக் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
சுமார் ஒரு மாதத்தின் பின் சமாதானம் உருவாக்கப்பட்டது. இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்களது இடங்களில் வந்து குடியேறுமாறு முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டனர். அவ்வாறு குடியேறினால் முஸ்லிம்களும் தீக்கிரையாக்கப்பட்ட, தங்க ளுக்கு அரசாங்க அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் குடியேறுவர் என்கிற காரணத்தால் தங்களது நிலங்களை முஸ்லிம்களுக்கு கொழுத்த விலைகளுக்கு விற்றுவிட்டு முஸ்லிம்கள் விரட்டப்பட்ட குருந்தையடி போன்ற இடங்களில் அத்தமிழர்கள் குடியேறி அரசாங்க அனுமதிப் பத்திரம் பெற்று இன்றும் வாழ்கின்றனர். ஸாஹிராக் கல்லூரியை அண்டிய அக்காணிகளுக்கு ஞானமுத்து, கந்தையா, சந்திரசேகரன் போன்ற தமிழ் நொத்தாரிசுகளே உறுதியும் எழுதியுள்ளனர். இந்தச் சட்பூர்வக் காணிக் கொள்வனவை எவ்வாறு நில ஆக்கிரமிப்பு என்று கூறுவது?
எனவே, விடயமறிந்தோரும், படித்தவர்களும் இவ்வடயத்தில் தெளிவுபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
Comments
Post a Comment