இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறந்து வைப்பு

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை இன்று காலை 9 மணியளவில் மக்கள் பார்வைக்காக காத்தான்குடியில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் வரை, குறித்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
நூதனசாலையின் உத்தியோகபூர்வ திறப்பு விழா ஜனாதிபதி தலைமையில் வெகு விரைவில் நடைபெறவுள்ளமை குறுப்பிடத்தக்கது.
கலாச்சார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் வழிகாட்டலில் பல மில்லியன் ரூபாய் செலவில் 4 மாடிகளுடன் இந்த நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவு பழக்க வழக்கங்கள், வியபாரா முறைகள், புராதன பள்ளிவாயல்கள், முதலாவது வுளு செய்த இடம் உட்பட பல நூறு முஸ்லிம் சமூகம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.
இன்று காலை இடம்பெற்ற உத்தியோகபூர்வமற்ற திறப்பு விழாவில் முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்.
காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகர சபை உறுப்பினர்கள், கல்விமான்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
















Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்