பேராசிரியர் மர்ஹும் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் அவர்களின் தனி நபர் நூல்சேகரிப்பு பகுதி அங்குரார்ப்பண நிகழ்வு
( அப்துல் அஸீஸ்) கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகம் (எக்டோ ) ஏற்பாடு செய்திருந்த பேராசிரியர் மர்ஹும் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் அவர்களின் தனி நபர் நூல் சேகரிப்பு பகுதி அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எக் டோ நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பொறியியலாளர் இஸட்.ஏ.எம்.அஸ்மிர் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரு ம் , ஓமான் சுல்தான் கபுஸ் பல்கலைக்கழக ஆலோசகருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி பிரதம அதிதியாகவும் , தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எச்.தௌபீக் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டதுடன், இதில் கல்வித்துறை அதிகாரிகள் , வர்த்தக பிரமுகர்கள் ,சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகத்திற்கு ஆலோசகராக இருந்து அதன் அபிவிருத்திக்கு பல வழிகளிலும் உதவி வந்த மர்ஹும் பேராசிரியர் ...