கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் ஏற்பாடு செய்த ஐஸ்கிறீம் தன்சல
பொசோன் பௌர்ணமி வெஸாக் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் வெஸாக் தன்சல்கள் இடம் பெறுகின்றன. முதல் தடவையாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் ஏற்பாடு செய்த ஐஸ்கிறீம் தன்சல இன்று காலை தொடக்கம் பிறபகல் வரை வைத்தியசாலை முன்பாக அமைக்கப் பட்ட பொசோன் பந்தலில் இடம் பெற்றது.
வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரனின் ஆலோசனையூடன் வைத்திய சாலையில் கடமை புரிகின்ற சிங்கள வைத்திய அதிகாரிகள் ,வைத்தியர்கள் ,தாதியர்கள் மற்றும் ஊழியர்களினால் இந்த ஐஸ்கிறீம் தன்சல் இடம் பெற்றது.
பிரதேசத்தின் சீதோசண நிலை கடும் வெப்பமாக காணப்பட்டதால் பெருமளவு மக்கள் இந்த ஐஸ்கிறீம் தன்சல நிகழ்வில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
Comments
Post a Comment