நான் பிறந்த மண்ணே ...
நான் பிறந்த மண்ணே ... நாட்களின் புது வரவுகளில் நான் பிறந்த மண்ணின் உறவுகளுக்கு நலமறிய ஸலாமுரைத்து நற் செய்திகள் பரிமாறி தொலைத் தொடர்புகளால் விடைபெறுவதென் வழக்கம் அன்றும்... வழமைபோல் ஆவலுடன் மௌனத்தில் ஓடிய நிமிடங்கள் நீண்டது மணித்தியாலங்களை காலம் விழுங்கிச் செல்ல என்னவென்றறிந்திட ஏது செய்யலாமென உண்ணாதுறங்காதிருந்தேன் மறுநாள்.... துவக்குச் சட்டத்தால் அடக்கியதும் வன் செயலால் முடக்கியதும் வாழ்வாதாராங்கள் எரிந்து சாம்பலாகியதும் கல்லடிகளால் உடைத்;து நொறுக்கியதும் மஸ்ஜிதுகளை காத்திடும் இறைவழிப் போர் களத்திறங்கிய சகோதர உயிர்கள் சஹீதாகிப் போனதும் துன்பியல் வரலாறாக - என் செவிகளுக் கெட்டியது அறுத்த கோழியைப் போல் துடித்தது - என் உள்ளமும் உணர்வுகளும் சீர்குலைக்கப்பட்ட - என் பிறந்த மண்ணே - உன் எழிலை கண்களுக்குள் விழித்த கனவுகளாய் சீர்தூக்கிப் பார்க்கிறேன் மௌன விரதம் பூண்டு மெல்ல நடந்து சென்று பாத்திரமேந்தி கேட்டுப் புசிக்கும் ஆசைகள் துறந்த (அப்) பாவிகளா... நம் அடையாள ஆவணங்களை கொள்ளையடித்து கா...