கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்; வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றம்!
கல்முனை மாநகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களின் முழு ஆதரவோடு அங்கீகரிக்கப்பட்டது. கல்முனை மாநகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரினால் இன்று மாலை சமர்ப்பிக்கப்பட்ட போது சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், பிரதி மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப், ஏ.ஆர்.அமீர், ஏ.எம்.றகீப், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர்அலி, ஏ.ஏ.பஸீர், ஏ. நஸார்தீன், ஏ.எம்.பறக்கத்துல்லாஹ், எம்.ஐ.பிர்தௌஸ், எம்.எல்.சாலித்தீன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஸீ.எம்.முபீத், .இஸட்.ஏ.றஹ்மான், தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், ஏ.விஜயரெட்னம், எஸ்.ஜெயகுமார், ஜீ.கமலதாஸன் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான ஏ.எச்.எச்.எம். நபார் ஆகிய மொத்த உறுப்பினர்கள் பிரசன்னமாயிருந்தனர். வரவு செலவு திட்ட விவாதத்தை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதி முதல்வர்...