Posts

கல்முனை செலான் வங்கி கிளையின் வாணி விழா

Image
கல்முனை  செலான்  வங்கி கிளையின் வாணி விழா வங்கி முகாமையாளர் பிறேமினி மோகன்ராஜ் தலைமையில்    இன்று  நடை பெற்றது.  பிராந்திய முகாமையாளர் எஸ்.எஸ்.முததீச பிரதம அதிதியாக கலந்துகொண்டிருப்பதையும் விக்கினேஸ்வரன் பிரம்மின் பூசை வழிபாட்டினை நடத்துவதையும்  வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்களையும் காணலாம் 

கணக்காளர்களுக்கு வருடாந்த இடமாற்றம்

அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சினால் 46 கணக்காளர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது 2019.01.01 திகதி தொடக்கம் அமுல்படும் வகையில் இடமாற்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதன் பிரகாரம் கிழக்கு மாகாண சபை கணக்காளராக பதவி வகிக்கும் கணக்காளர் ஏ.எம்.மொஹமட் ரபீக் அம்பாறை மாவட்ட செயலகத்துக்கும் அம்பாறை மாவட்ட செயலக கணக்காளராக பதவி வகிக்கும் எம்.ஐ.எம்.முஸ்தபா கிழக்கு மாகாண சபை கணக்காளராகவும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதுடன், நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளராக பதவி வகிக்கும் வை.ஹபீபுல்லா கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்கும் கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளராக பதவி வகிக்கும் றிஸ்வி யஹ்சர் நாவிதன்வெளி பிரதேச செயலாளராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர் . சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜ்முதீன் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளராகவும் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளராக பணியாற்றிய கே.எல்.பஸீல் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன மத வேறுபாடின்றி நடைபெற்ற கல்முனை கல்வி வலய வாணி விழா

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நவராத்திரி விழாவின் வாணி விழா வழிபாடு பெறியியலாளர் ஜீ.அருண் தலைமையில் இன்று (16)இடம் பெற்றது கல்முனை வலய கல்வி அலுவலக பிரதிக் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ் உமர்மௌலானா பிரதம அதிதியாகவும் , வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர்  கலந்து கொண்டனர். நிழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் சஞ்சீவ.சிவகுமார் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சைவ நற்சிந்தனை சிறப்புரை நிகழ்த்தினர். வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் இடம் பெற்ற வாணி விழா பூசை வழிபாடுகள் பெரியகல்லாறு மண்டபத்தடி பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிரியா திலகம் த.விஜயவர்மக் குருக்கள் தலைமையில் இடம் பெற்றதுடன் பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம் பெற்றன.  இன மத பேதமின்றி வருடந்தோறும் நடை பெற்று வருகின்ற வாணி விழா நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட ஆசிரிய ஆலோசகர்கள் , அதிபர்கள் வலயக் கல்வி அலுவலக உத்தியோ...

பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

Image
இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின்   கல்முனை  பிராந்திய  சங்க  வருடாந்த  பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (14)  நிந்தவூர் அட்டப் பள்ளம்  தோம்புக்கண்ட  விடுதியில் நடை பெறவுள்ளது . சங்கத்தின் தலைவர்  சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெரீன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்  மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார் .  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்  ஏ.அருள்குமரன் ,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன் ,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்  பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.ஏ.ஏ.இஸ்ஸடீன்  உட்பட இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின்  தலைவர் எம்.ஜீ.யு.ரோஹண  ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் 

கல்முனை மாநகர சபை எதிரணி உறுப்பினர்கள் மாநகர கட்டளைச் சட்டத்தை மீறுகின்றனர்

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர சபை கட்டளைச்சட்டத்தை அறியாமல் செயற்படுகின்றனர். கல்முனை மாநகர சபையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதற்காக அவர்கள் நினைத்த விடயங்களையெல்லாம் நிறைவேற்றி நிருவாக செயற்பாட்டை முடக்கும் எண்ணத்தோடு மாநகர முதல்வர் ஒரு பொம்மையாக செயற்பட வேண்டும் என நினைப்பது மாநகர கட்டளைச் சட்டத்தை மீறும் செயல் என கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை எதிரணி உறுப்பினர்கள் மாநகர முதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கனை முன் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுனரின் மட்டக்களப்பு அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி ஆளுனரிடம் மகஜரும் கையளித்துள்ளனர். மாநகர சபை உறுப்பினர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை(06) கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களது குற்றச்சாட்டுக்களை மறுத்து உறுப்பினர்கள் மாநகர கட்டளைச் சட்டத்தை மீறி நடக்க முடியாது எனவும் இ...

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபராக கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் நியமனம்

Image
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக  பணியாற்றிக் கொண்டிருக்கும் மருதமுனையைச் சேர்ந்த ஏ.எல்.சக்காப்  திங்கட்கிழமை(08) முதல் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபராக  நியமிக்கப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவி  வகித்த இவருக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மருதமுனை ஷம்ஸ் மத்திய  கல்லூரியின் அதிபருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர்  பேராதனை  பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பட்டம் பெற்றவர். 1987இல் மருதமுனை ஷம்ஸ்  மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய இவர்  1999இல் கல்முனை  வலயக்கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு அதிபர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த இவர் 2009இல் அதிபர்  தரம்-1 க்கு உயர்வு    பெற்றார். கல்முனை கல்வி வலயத்தின் கல்விசார் ஊழியர்களின் தலைவராக நீண்ட காலம்  பணிபுரிந்த இவர் அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ...

கல்முனை கல்வி வலயத்தில் அறுவருக்கு குரு பிரதீபா பிரபா விருது

Image
  கல்வி அமைச்சின்  வழி காட்டலில்  நடை பெறும்  ஆசிரியர் அதிபர் மதிப்பளிக்கும் இவ்வருடத்துக்கான  குரு பிரதீபா பிரபா விருது பெற கல்முனை கல்வி வலயத்தை  சேர்ந்த  ஆறு ஆசிரியர்கள் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . சாய்ந்தமருது அரச முஸ்லிம் கலவன் பாடசாலை ஆசிரியை திருமதி சுபைதா மொகம்மட்  இப்ராஹிம் , மாளிகைக்காடு அல் -ஹுசைன்  வித்தியாலய ஆசிரியை திருமதி எஸ்.எச்.மொஹம்மட் றபீக் ,காரைதீவு  சண்முகா மகா வித்தியாலய ஆசிரியை  திருமதி புவனேஸ்வரி ஜெயகனேஷ் ,கல்முனை  உவெஸ்லி உயர்தர பாடசாலை ஆசிரியை திருமதி எஸ்.மோகன்,சாய்ந்தமருது அல் -ஹிலால் வித்தியாலய அதிபர் எம்.எல்.மொஹம்மது பைசால் ,நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய ஆசிரியர் எம்.எஸ்.கபீர்  ஆகிய  ஆறுபேரும் குரு பிரதீபா பிரபா விருது பெறவுள்ளனர் . இந்த விருது வழங்கும் விழா நாளை   வெள்ளிக்கிழமை (05) காலை 10.00 மணிக்கு  பண்டார நாயக்க  சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடை பெறவுள்ளது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தாய்லாந்திலிருந்து நாளை நாடு திரும்புகிறார்

Image
உலக புதியகல்வியின் போக்கு என்ற தலைப்பிலான பயிற்சிப்பட்டறையொன்றில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து 32 கல்வித்துறைசார் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (28) தாய்லாந்து சென்று ஒருவார பயிற்சியின் பின்னர் நாளை வெள்ளிக் கிழமை தாய்நாடு திரும்புகின்றனர்

கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Image
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் கல ்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மலசலகூடக் கழிவுகளை அகற்றி சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் 3400 கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று(19-09-2018)மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது இதற்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :-பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியுடனும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களின் பங்களிப்புடனும் இந்த வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபை பிரதேச மக்களுக்காக கொண்டவரப்பட்டுள்ளது. கனேடிய அரசாங்கத்தின் 3400 கோடி ரூபா நிதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.கல்முனை ம...

பிரதி அமைச்சர் ஹரீஸ் சபாநாயகரிடம் மகஜர் கையளிப்பு.

Image
(அகமட் எஸ். முகைடீன்) இந்நாட்டின் தேசிய நலனுக்காக பெரும் பங்காற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க கோரும் மகஜர் ஒன்றை பிரதி அமைச்சர் ஹரீஸ் இன்று (20) வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று முந்தினம் (18) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் மேற்படி கோரிக்கைக்கான வேண்டுகோளை தனது உரையின்போது விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தில் விடுத்த அவ்வேண்டுகோளை செயலுருப்படுத்தும்வகையில் சபாநாயகர் கரு ஜயசூரியவை பாரளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து மேற்குறித்த மகஜரை கையளித்துள்ளார். இலங்கை அரசியலில் ஒரு கிங் மேக்கராக இருந்த அஷ்ரஃப் அவர்களின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றமை இங்கு குற...

கல்முனை நகருக்குள் காட்டு யானைகள்

Image
கல்முனை நகருக்குள் காட்டு யானைகள் புகுந்து மக்களுக்கு அச்சுறுத்தல் கட்டுப்படுத்துமாறு அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர் . நேற்று இரவு (12) கல்முனையில் உள்ள விதைநெல் உற்பத்தி நிலையமொன்றை உடைத்து அங்கிருந்த விதை நெல்லை சேதப்படுத்திய சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சக்கர நாற்காலி வழங்கி வைப்பு

Image
நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் சமூக சேவை பிரிவினால் நற்பிட்டிமுனையில் வலது குறைந்த ஒருவருக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு செய்யப்பட்டது.    நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சி.எம்.ஹலீம்  நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் ஆலோசகரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு அதிபருமான திருமதி ஏ.முனாஸிர் ஆகியோர் சக்கர நாற்காலி வழங்கி வைப்பதைக் காணலாம் 

நற்பிட்டிமுனையில் டெங்கு சுகாதார திணைக்களம் உறக்கத்தில்

Image
நற்பிட்டிமுனை கிராமத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளது இதற்கு சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லையென அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . நற்பிட்டிமுனை கிராமத்தில் பாவா வீதி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் சிறுவர்கள் என பலர் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையிலும் அகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட ்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இவர்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் டெங்கு நுளம்பினால்தான் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வைத்தியசாலை வட்டாரமும் நற்பிட்டிமுனை பொது மக்களும் சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ள போதிலும் இதனை கட்டுப்பாடுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை இந்த செய்தி எழுதும் வரைக்கும் எடுக்கப்படவில்லை . இப்போதே கட்டுப்பாடுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லயெனில் கிராமம் முழுவதும் பரவலாம் என்ற அச்சம் நற்பிட்டிமுனை கிராம மக்கள் மத்தியில் நிலவுகின்றது. சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லயென நற்பிட்டிமுனை பொது மகன் ஒருவர் கல்முனை பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளரு...

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தமிழ் - முஸ்லிம் உறவை சிதைக்க சதி!

Image
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம்  முகவரியற்ற சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்க திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-  ‘மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பஸ் - வேன் விபத்தொன்று சம்பந்தமாக சில முகவரியற்ற இனவாத தமிழ் இணையதளங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை என்னைத் தொடர்பு படுத்து வெளியிட்டிருந்தன.  குறித்த செய்தியில் விபத்துக்குள்ளான  பஸ் எனக்குச் சொந்தமானாதாகவும், அதற்கு வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. குறித்த பஸ் எனக்குச் சொந்தமானது அல்ல.  குறித்த பஸ் காத்தான்குடியிலிருந்து சொல்வதற்காக அது எனக்...

நற்பிட்டிமுனை மண்ணை கெளரவித்த கிழக்கு மாகாண ஆளுநரை மண்ணின் மைந்தர்கள்முபீத் ,ஹலீம் கெளரவித்தார்கள். மண்ணுக்குப் பெருமை

Image

நற்பிட்டிமுனை கல்வி சாதனையாளர்கள் கிழக்கு மாகாண ஆளுநரினால் கெளரவிப்பு

Image
நற்பிட்டிமுனை கிராமத்தில்  கடந்த ஆண்டு (2017) கல்வித் பொது தராதர சாதாரண பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டும்  நிகழ்வு நேற்று   செவ்வாய்க்கிழமை (28) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடை பெற்றது. நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  ஏற்பாட்டில் நடை பெற்ற  நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவித்தார் . நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவரும் வணிக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளருமான சி.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற  இந்த நிகழ்வில் கல்முனை கல்வி வலய பாடசாலைகளில் கல்வி கற்ற  நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த 14 மாணவர்கள் பாராட்டிக் கெளரவிக்கப் பட்டனர் . இந்த  கெளரவிப்பு நிகழ்வில்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.ஜீ.கே.முத்துபண்டா ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் , உட்பட பாராட்டுப் பெற்ற  மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பித்தனர் .