மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபராக கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் நியமனம்
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் மருதமுனையைச் சேர்ந்த ஏ.எல்.சக்காப் திங்கட்கிழமை(08) முதல் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவி வகித்த இவருக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பட்டம் பெற்றவர். 1987இல் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய இவர் 1999இல் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1999ஆம்
ஆண்டு அதிபர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த இவர் 2009இல் அதிபர் தரம்-1 க்கு உயர்வு பெற்றார்.
கல்முனை கல்வி வலயத்தின் கல்விசார் ஊழியர்களின் தலைவராக நீண்ட காலம் பணிபுரிந்த இவர் அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவராகவும், மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பெரிய பள்ளிவாசல் தலைவர்,செயலாளர்,பொருளாளர் பதவி வகித்ததோடு மருதமுனை நிதா பவுண்டேஸன் தலைவராகவும், மருதமுனை ஜம்இயதுல் உலமா சபையின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து
பொதுப்பணிகளில் ஈடுபாடுகொண்டவராக உள்ள இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்
Comments
Post a Comment