கல்முனை மாநகர சபை எதிரணி உறுப்பினர்கள் மாநகர கட்டளைச் சட்டத்தை மீறுகின்றனர்


கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர சபை கட்டளைச்சட்டத்தை அறியாமல் செயற்படுகின்றனர். கல்முனை மாநகர சபையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதற்காக அவர்கள் நினைத்த விடயங்களையெல்லாம் நிறைவேற்றி நிருவாக செயற்பாட்டை முடக்கும் எண்ணத்தோடு மாநகர முதல்வர் ஒரு பொம்மையாக செயற்பட வேண்டும் என நினைப்பது மாநகர கட்டளைச் சட்டத்தை மீறும் செயல் என கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை எதிரணி உறுப்பினர்கள் மாநகர முதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கனை முன் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுனரின் மட்டக்களப்பு அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி ஆளுனரிடம் மகஜரும் கையளித்துள்ளனர்.



மாநகர சபை உறுப்பினர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை(06) கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களது குற்றச்சாட்டுக்களை மறுத்து உறுப்பினர்கள் மாநகர கட்டளைச் சட்டத்தை மீறி நடக்க முடியாது எனவும் இனி வரும் காலங்களில் இந்த விடயம் கண்டிப்புடன் இடம் பெறும் எனவும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்