நற்பிட்டிமுனையில் டெங்கு சுகாதார திணைக்களம் உறக்கத்தில்


நற்பிட்டிமுனை கிராமத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளது இதற்கு சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லையென அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

நற்பிட்டிமுனை கிராமத்தில் பாவா வீதி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் சிறுவர்கள் என பலர் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையிலும் அகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இவர்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் டெங்கு நுளம்பினால்தான் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வைத்தியசாலை வட்டாரமும் நற்பிட்டிமுனை பொது மக்களும் சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ள போதிலும் இதனை கட்டுப்பாடுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை இந்த செய்தி எழுதும் வரைக்கும் எடுக்கப்படவில்லை .
இப்போதே கட்டுப்பாடுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லயெனில் கிராமம் முழுவதும் பரவலாம் என்ற அச்சம் நற்பிட்டிமுனை கிராம மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லயென நற்பிட்டிமுனை பொது மகன் ஒருவர் கல்முனை பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளருக்கு அறிவித்த போது அந்த விடயத்தை பத்திரிகைக்கு அனுப்புமாறு கூறியுள்ளார் .
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் அவசரமாக இதற்கான நடவடிக்கை எடுக்க தவறினால் சுகாதார திணைக்களத்துக்கு எதிரான போராட்டம் செய்யப்போவதாக நற்பிட்டிமுனை மக்கள் பள்ளிவாசல் நிருவாகிகளையும் ,அரசியல் பிரமுகர்களையும் கேட்டுள்ளனர்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி