கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்

கல்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மலசலகூடக் கழிவுகளை அகற்றி சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் 3400 கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று(19-09-2018)மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது இதற்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :-பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியுடனும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களின் பங்களிப்புடனும் இந்த வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபை பிரதேச மக்களுக்காக கொண்டவரப்பட்டுள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் 3400 கோடி ரூபா நிதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.கல்முனை மாநகர வரலாற்றில் அதிகூடிய நிதியில் முன்னெடுக்கப்படும் வேலைதிட்டம் இதுவாகும்.பல வருடங்களாக முயற்சி செய்து 
இந்த வேலைத்திட்டத்திற்கான திட்ட வரைவு பூரணப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் ஒத்துழைத்தால்தான் மக்களுக்கான இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் ஆகவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சசின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர்,கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கனேஸ் மற்றும் உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர்கள்,ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள்.கிராம உத்தியோகத்தர்கள் உள்ளீட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்;டனர்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி