Posts

இன கலவர தாக்குதல் தொடர்பில் 445 முறைப்பாடு; 280 பேர் கைது

Image
- 10 பிரதான சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணை - இன முறுகலை ஏற்படுத்தும் ஆயிரக் கணக்கான போஸ்டர்களும் மீட்பு கடந்த வாரம் கண்டி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற இன கலவர தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில்  கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் நேற்று (12) வரையில் வீடுகள், கடைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 445 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்  ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவலை தெரிவித்தார். 445 முறைப்பாடுகளில்  கண்டியில் மட்டும் 423 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, ஏனைய பிரதேசங்களில் சேதங்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.  வணக்கஸ்தலங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் கண்டியிலிருந்து 19 முறைப்பாடுகளும்,   ஏனைய பகுதிகளிலிருந்து 5 முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கலவரங்கள் தொடர்பில் மொத்தமாக 280 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, கண்டியில் மாத்திரம் 178 பேர் கைது செய்யப்பட்டு...

71 பேருடன் பயணித்த விமானம் வெடித்து விபத்து

Image
40 பேர் உடல் கருகி பலி; 9 பேர் சிகிச்சை பலனின்றி பலி; 22 பேர் வைத்தியசாலையில் பங்களாதேஷின் டாக்காவிலிருந்து 71 பேருடன் சென்ற பங்களாதேஷ் விமானம் ஒன்று நேபாள் நாட்டில் தரையிறங்கும்போது வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் அதில் பயணித்த 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 22 பேர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷில் இயங்கும் தனியாருக்குச் சொந்தமான, யுஎஸ்-பங்களா விமான சேவைக்குச் சொந்தமான BS 211 எனும் விமானம், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து நேபாள் தலைநகர் கட்மண்டுவிலுள்ள ட்ரிபுவான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓடு தளத்தில் பிழையான திசையில் தரையிறங்கியதன் காரணமாக குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. விபத்தை அடுத்து, தீப்பிழம்புடன் வெடித்த விமானம் சாம்பரானதோடு, ஸ்லத்தில் உடல் கருகி நிலையில் 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதோடு, வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்ட நிலையில் 09 பேர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடக...

பிரதமரை திருப்திப் படுத்த பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக எடுக்கவிருந்த ஒழுக்காற்று நடவடிக்கை முயற்சி பெரும்பான்மையான உச்சபீட உறுப்பினர்களின் எதிர்ப்பினால் தோல்வி.

Image
(றிஸ்கான் முஹம்மட்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இனவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிராக மிகக் காட்டமாக உரையாற்றியமை தொடர்பில் ஹரீசுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கட்சியின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் சிலரால் முன்மொழியப்பட்டது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டம் நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைமையகமான தாறுஸ் ஸலாமில் 4 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றபோதே மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் முன்மொழியப்பட்டது. இவ் உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சமகால இனவாத தாக்குதல் சம்பங்கள் மற்றும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.   இதன்போது கட்சியின் செயலாளர் மற்றும் சில முக்கிய உறுப்பினர்கள், பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமருக...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இந்த வாரம் வெளியிடப்படவுள்ளன.

Image
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இந்த வாரம்  வெளியிடப்படவுள்ளன. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இம்முறை பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முழு உலகிலும் சிங்கள இனம் குற்றவாளிகளாக பெயர்பெற்றுள்ளனர் : பிரதமர் ரணில்

Image
ஒரு சிலரின் இழிவான செயல்கள் காரணமாக முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டைஎதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் ஊடாக உலகில் ஏனைய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட்டு பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல தெற்காசியாவில் வாழும் ஏனைய பௌத்த மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை அழிவு தொடர்பான செய்தி மிக விரைவில் உலகம் முழுவதும் பரவியுள்ளது.கொழும்புக்கு அடுத்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வரும் நகரம் கண்டி. மேலும் சுற்றுலாப் பயணிகளாக வரும் அரேபியர் அதிகளவில் கண்டிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அண்மையில் கண்டியில் ஏற்பட்ட நிலைமைகள் சுற்றுலா தொழிற்துறைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றுபட்டு ஐ.நா.விடம் முறைப்பாடுசெய்த முஸ்லிம் அரசியல்வாதிகள்

Image
இலங்கை முஸ்லிம்கள்  மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும்  அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை  எடுக்குமாறு, அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஐக்கிய நாடுகள்  சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம் வேண்டுகோள் விடுத்தனர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டு கொழும்பு வந்திருக்கும் அவரை, சினமன் கிரான்ட் ஹோட்டலில்  சந்தித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அம்பாறை மற்றும் கண்டி ஆகிய  பகுதிகளில் முஸ்லிம்கள் மீதும்,  அவர்களின் சொத்துக்கள், பள்ளிவாசல்கள் மீதும் நடத்தப்பட்ட கொடூரமான  வன்முறைகளை விபரித்ததுடன், இவ்வாறான அடாவடித்தனங்கள் இன்னும் முடிவுக்கு  கொண்டுவரப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.  இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், பைசர் முஸ்தபா மற்றும் ராஜாங்க அமைச்சர் பௌசி,...

நாடு முழுவதும் கலவரம் ஏற்படுத்திய 230 பேர் கைது

Image
கண்டியில் தற்போது மிக அமைதியான சூழல் நிலவுகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். குறிப்பாக நேற்று (10) மற்றும் இன்றைய தினங்களில் (11) குறித்த பிரதேசத்தில் எவ்வித குற்றச் செயல்களும் பதிவாகவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், அமைதியை நிலைநாட்டும் பொருட்டு தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற கலகம் தொடர்பில் இது வரை 161 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அது தவிர நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இவ்வாறான கலக நடவடிக்கைகள் பதிவாகியதற்கு அமைய, மேலும் 69 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட 230 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதேவேளை கண்டி பிரதேசத்தில் நேற்று (10) முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் இம்மாதம் 20 இல் ஆரம்பம்

Image
புதிய உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் இம்மாதம் 20ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகுமென்று மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்ற தலைமை ஆணையாளர் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்களின் முதலாவது கூட்டம் பிரதி உள்ளுராட்சி மன்ற ஆணையாளரின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது. புதிய உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபையின் முதலாவதுகூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதன் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 119 ஆகும். அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால் கொழும்பு மாநகர சபையில் இதற்கான வசதிகள் இல்லை. இதற்காக புதிதாக கட்டிடம் ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மேலும் குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தின் விசேட நடவடிக்கை மையம்

Image
அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை பெற்றக்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகம் விசேட நடவடிக்கை மையம் ஒன்றை அமைத்துள்ளது. இந்தத் தகவல்களை 0113 02 48 92 அல்லது 0113 02 48 83 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும். பெறப்படும் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தேவையான நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் இனவாதத்தைப் பரப்பும் அடிப்படைவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - இராணுவத் தளபதி

Image
நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் நோக்குடன் இனவாதத்தைப் பரப்பும் அடிப்படைவாதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக இராணுவத்தினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பினரின் அற்ப நோக்கங்களுக்காக நாட்டின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலிகொடுக்க அரசாங்கம் தயாரில்லை. இவ்வாறான அற்ப நோக்கங்களுக்காக செயற்படுபவர்களுக்கு எதிராக உயர்ந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்த இராணுவம் தயாராகவுள்ளது. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவத்துடன் பல்வேறு பெயர்களில் தோன்றிய இனவாத இயக்கங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வைபர், வட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக திட்டமிட்ட வகையில் செயற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தின் கீழ் தேவையான உயர்ந்த பட்ச அதிகாரத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதாகவும் இராணுவத்தளபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றம்

Image
இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை காணரமாக நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேகமூட்டம் மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சுமார் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி குறிப்பாக தெற்கு , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை பொலன்னறுவை மாவட்டங்களிலும் பெய்யக்கூடும். 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்திற்கும் அதிகமாக குறிப்பாக தென் மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பிரதேசங்களில் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பதிவாகக்கூடும். தென்மேல், தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் இயங்குநிலை மேகக்கூட்டங்கள் காரணமாக களுத்துறையிலிருந்து , காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்க...

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவேன்

Image
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள்  தொடர்பான அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவேன் - எச்.எம்.எம்.ஹரீஸ் (பிரதி அமைச்சர் ) முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைத் தாக்குதல் கடந்த 5ஆம் திகதி திங்கட்கிழமை மிகப் பெரியளவில் திகன பிரதேசத்தில் பேரினவாத சக்திகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. திட்டமிடப்பட்டு நடைபெற்ற இந்த வன்முறை 83 ஜுலை கலவரம் போன்று தொடர்ச்சியாக 3 நாட்கள் தொடர்ந்தது. கண்டி பிரதேசமெங்கும் பெரும் வன்முறைகள் வெடித்து பள்ளிவாசல்கள், கனக்கிலடங்காத முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் சேதமாக்கப்பட்டதோடு உயிர் ஒன்றும் பலியாக்கப்பட்டு பெரும் கொடூரம் நடைபெற்றுள்ளது.  பேரினவாதக் காடையர்களின் காட்டுமிரான்டித் தனமான இவ்வினவாத வன்முறைச் சம்பவம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு அரசுக்கு சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பாடாத வகையில் பாதுகாப்பு அரன்களை உருவாக்க வேண்டிய தேவை எம் சமூகத்திற்குள்ளது. அந்தவகையில் இவ்வன்முறைச் சம்பவத்தின் புகைப்படங்கள், கானொளிகள் உள்ளிட்ட ஆவணங்க...

மகாநாயக்கர் என்ன ஆண்டவனே வந்தாலும் என் சமூகம் பற்றிய உண்மையைத்தான் சொல்வேன் , சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வதுதான் எனக்குள்ள பொறுப்பு -அமைச்சர் றிஸாத்

Image
முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் பள்ளிவாசல்களை இனவாதிகள் மோசமாகத் தாக்கி, உடைத்து, எரித்தபோதும்அந்தச் சமூகத்தினர் இன்னும் பொறுமையாக இருக்கின்றனர் என்றால், அவர்கள் ஆயுதத்தின் மீதோ, தீவிரவாதத்தின் மீதோ நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர் என்பதையே அது உணர்த்துவதாக, அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெளிவுபடுத்தினார். சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டகுழுவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அங்கம் வகித்திருந்தார். இந்தக் குழு அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை தனித்தனியாகச் சந்தித்திருந்தது. அமைச்சர் ரிஷாட் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், அம்பாறையில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிரச்சினைக்காக, ஒருசில மணி நேரங்களுக்குள், அந்த ஹோட்டலுக்கு தொலைவில் இருந்த பள்ளிவாசல்களை உடைத்து சேதப்படுத்தியும், அங்கு பணிபுரிந்த மௌலவியையும் அடித்து காயப்படுத்தியுள்ளார்கள். பள்ளிவாயலுக்கு அருகில் இருந்த இன்னும் இரண்டு ஹோட்டல்களையும் தீவைத்து...

அரபு நாடுகள், இலங்கை மீது அதிருப்தி - உறவுகள் பாதிக்கப்படலாம்

Image
இலங்கையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் அரபு நாடுகள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க அந்த நாடுகள் தீர்மானித்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இன்று -10-வெளியிட்டுள்ள செய்தி தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கொழும்பிலுள்ள அதன் தூதுவர்களூடாக முழுமையான விவரங்களைத் திரட்டிவரும் இந்த நாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதற்கெதிராக கூட்டு எதிர்ப்பை வெளியிட தீர்மானம் எடுத்துவருவதாக அரபு நாடொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பிலுள்ள உயர்மட்ட தூதுவரொருவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டங்களில் எதிர்த்து வாக்களித்தபோதும், இப்போது இலங்கையில் நடைபெறும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை ...

தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

Image
தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வீதி கடவையில் படுத்து ஆர்ப்பாட்டம்

Image
கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே  வீதி கடவையில்   படுத்து இன்று (10) ஆர்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.   நாவலபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபைக்ஷவை  இடமாற்றம் செய்யக்கோரி இன்று (10) காலை 5.00 மணி முதல் இவ்வார்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது    கண்டி - ஹட்டன் பிரதான வீதியின் நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உள்ள மஞ்சள் கடவையில்  படுத்தவண்ணமே மேற்படி ஆர்பாட்டம் இடம்பெற்றுவருவதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து மாற்று பாதையில் இடம்பெற்று வருவதாக நவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்   ஆர்பாட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு கம்பளை  மாவட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் வருகைத்தந்துள்ள போதிலும்  நீதியை சரியாக கடைபிடிக்காத பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை ஆர்ப்பாட்டத்தை தொடரப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்தகமகே தெரிவித்தார்.  

கண்டி ,அம்பாறை தொடர்பில் UNHRC ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இப்படி கூறினார்

Image
Video : இலங்கைக்யில் இடம்பெறும் இனவாத வன்முறைகள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் UNHRC கூறும் அழுத்தமான செய்தி !!ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில்  இடம்பெற்றுவருகின்றது மார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில், மார்ச் 21ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன், நான்கு வாரங்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில், மார்ச் மாதம் 16ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் விடயம் தொடர்பில் கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது. அதனையடுத்து, மார்ச் மாதம் 21ஆம் திகதி இலங்கை தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.இன்று ஆரம்பமான கூட்டத்தொடரில் ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரஸ் உரையாற்றினார். அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைனும் வருடாந்த அறிக்கையை சமப்பித்து உரையாற்றும்போது ……

திகனையில் தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசல்களை முழுமையாக நிர்மாணிக்க ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

Image
பள்ளிவாசல் நிர்வாகத்தினரை நேரடியாக சந்தித்து உறுதி வழங்கினார்  பேரினவாதிகளினால் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட திகன பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்களை தனது சொந்த நிதியிலிருந்து முழுமையாக நிர்மாணித்துத் தருவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  நேற்று வெள்ளிக்கிழமை திகன பிரதேசத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், இனவாதிகளின் கடும் தாக்குதலினால் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்ட ரஜவெல்ல அந்நூர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் பல்லேகல ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு நேரடியாக சென்று பாதிப்புக்களை பார்வையிட்டார். பின்னர், குறித்த இரு பள்ளிவாசல்களினதும் நிர்வாகத்தினர் விரும்பும் வகையில் பள்ளிவாசல்களை முழுமையாக மீள்நிர்மாணித்துத் தருவதாக உறுதியளித்தார்.  இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கின்ற திகன, கும்புக்கந்துர ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இராஜாங்க அமைச்சர் விஜயம் செய்த போது அங்கு விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. இதன்போது திகன பிரதேசத்தில் முழுமையாகவும் பகுதியளவும் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களி...

சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமை நிலைக்கு திரும்பும்

Image
பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைத்தளங்களின் வசதிகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த வசதிகள் 72 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். இந்தியாவில் இடம்பெற்ற வன்முறைகளை இலங்கையில் இடம்பெற்றதாக சித்தரித்த இணையத்தளங்களும் முடக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

”நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது” : வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு !!

Image
கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதியினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூட்டப்பட்டிருந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டனர். கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கலவர சூழலை ஏற்படுத்த காரணமானவர்களையும் கலவரங்களில் ஈடுபட்டவர்களையும் கைதுசெய்து அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தான் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த பல வருடங்களாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடர் இடம்பெறும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் செயற்பட்டுவருவ...

கல்முனை மாநகரத்தில் இந்த மையம் அமைந்துள்ள இடத்தைக் கண்டு பிடியுங்கள்

Image

அழித்த பின்னர் அழகைப் பார்க்க கண்டிக்குச் செல்லும் பிரதமர்

Image
கண்டியில் இனவன்முறை இடம்பெற்ற பிரதேசங்களிலுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று  (10) கண்டி பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலவரம் காரணமாக  திகன மற்றும் கென்கல்ல ஆகிய நகர்களில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் பார்வையிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மார்பு அழகை காட்டும் உடை அணியும் உரிமை உங்களுக்கு இருப்பது போன்று அதனை மறைக்கும் உடை அணியும் உரிமை எங்களுக்கும் உண்டு -முஜிபுர்ரஹுமான் (MP)

Image
மார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  ஜே.வி.பி.யின் பிமல் ரத்நாயக்க எம்.பி.க்கு சபையில் பதில் வழங்கினார். பாராளுமன்றத்தில் இன்று -09- வெள்ளிக்கிழமை வணிக கப்பற்தொழில் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது பிமல் ரத்நாயக்க எம்.பி கூறும் போது, முஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும். தற்போது தமிழர்கள் அடிப்படைவாதத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் இந்த களரியிலும் கூட பாடசாலை மாணவிகள் கூட முகத்தை மறைத்து கொண்டு வருகின்றனர். ஆகவே  இதனை முஸ்லிம் அமைச்சர் இணைந்து இவ்வாறான அடிப்படைவாதத்தை தடை செய்ய வேண்டும் என்றார். இதனையடுத்து முஜிபுர் ரஹ்மான் தனது உரையில் கூறும் போது, பிமல் ரத்நாயக்கவிற்கு அவ்வாறு கூற முடியாது. முகத்தை மூடுவது மூடாமல் விடுவது அவரவர் சுதந்திரமாகும். என்னுடைய மனைவி முகத்தை மூடுவது கிடை...

வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின், முக்கிய கவனத்திற்கு..!

Image
பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சட்டத்தரணிகளோ அரசியல்வாதிகளோ அவசியமில்லை. அண்மையில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்செயலில் உங்களது உடமைகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை உடனடியாக தத்தமது பிரிவு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்வதை கட்டாயம் உறுதிப்படுத்துங்கள். சேத விபரங்களின் உண்மையான மதிப்பீட்டை வெளிப்படுத்தி முறைப்பாட்டின் பிரதியையும் தவறாது பெற்றுக்கொள்வதுடன், முறைப்பாடு செய்த நேரம் மற்றும் திகதியுடன் முறைப்பாட்டு இலக்கத்தையும் குறித்து வையுங்கள். அரசாங்கத்தின் நஷ்டஈட்டைப் பெறுவதற்கு இது மிகவும் அவசியமாகத் தேவைப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதுடன், ஜனாதிபதியும் பிரதமரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அதனையும் முறைப்பாட்டில் தெரியப்படுத்துங்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக முறைப்பாடுகளைப் பதிவுசெய்யுங்கள். பள்ளிவாசல்களுக்குப் பொறுப்பானவர்கள் அவற்றையும் தனித்தனியாக முறைப்பாடு செய்யுங்கள். ஏற்பட்ட சேதங்களை முடியுமானவ...