நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் இனவாதத்தைப் பரப்பும் அடிப்படைவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - இராணுவத் தளபதி

நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் நோக்குடன் இனவாதத்தைப் பரப்பும் அடிப்படைவாதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.இதற்காக இராணுவத்தினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பினரின் அற்ப நோக்கங்களுக்காக நாட்டின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலிகொடுக்க அரசாங்கம் தயாரில்லை. இவ்வாறான அற்ப நோக்கங்களுக்காக செயற்படுபவர்களுக்கு எதிராக உயர்ந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்த இராணுவம் தயாராகவுள்ளது.


அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவத்துடன் பல்வேறு பெயர்களில் தோன்றிய இனவாத இயக்கங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வைபர், வட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக திட்டமிட்ட வகையில் செயற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தேவையான உயர்ந்த பட்ச அதிகாரத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதாகவும் இராணுவத்தளபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்