பாராளுமன்ற உறுப்பினர் வீதி கடவையில் படுத்து ஆர்ப்பாட்டம்

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே வீதி கடவையில்  படுத்து இன்று (10) ஆர்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
 
நாவலபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபைக்ஷவை  இடமாற்றம் செய்யக்கோரி இன்று (10) காலை 5.00 மணி முதல் இவ்வார்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது 
 
கண்டி - ஹட்டன் பிரதான வீதியின் நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உள்ள மஞ்சள் கடவையில்  படுத்தவண்ணமே மேற்படி ஆர்பாட்டம் இடம்பெற்றுவருவதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து மாற்று பாதையில் இடம்பெற்று வருவதாக நவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்
 
ஆர்பாட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு கம்பளை  மாவட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் வருகைத்தந்துள்ள போதிலும்  நீதியை சரியாக கடைபிடிக்காத பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை ஆர்ப்பாட்டத்தை தொடரப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்தகமகே தெரிவித்தார்.
 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்