மார்பு அழகை காட்டும் உடை அணியும் உரிமை உங்களுக்கு இருப்பது போன்று அதனை மறைக்கும் உடை அணியும் உரிமை எங்களுக்கும் உண்டு -முஜிபுர்ரஹுமான் (MP)

மார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  ஜே.வி.பி.யின் பிமல் ரத்நாயக்க எம்.பி.க்கு சபையில் பதில் வழங்கினார்.

பாராளுமன்றத்தில் இன்று -09- வெள்ளிக்கிழமை வணிக கப்பற்தொழில் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது பிமல் ரத்நாயக்க எம்.பி கூறும் போது,

முஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும். தற்போது தமிழர்கள் அடிப்படைவாதத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் இந்த களரியிலும் கூட பாடசாலை மாணவிகள் கூட முகத்தை மறைத்து கொண்டு வருகின்றனர். ஆகவே  இதனை முஸ்லிம் அமைச்சர் இணைந்து இவ்வாறான அடிப்படைவாதத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.

இதனையடுத்து முஜிபுர் ரஹ்மான் தனது உரையில் கூறும் போது,
பிமல் ரத்நாயக்கவிற்கு அவ்வாறு கூற முடியாது. முகத்தை மூடுவது மூடாமல் விடுவது அவரவர் சுதந்திரமாகும். என்னுடைய மனைவி முகத்தை மூடுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் முகத்தை மூடுகின்றனர்.  அது அவர்களுக்குரிய சுதந்திரமாகும். 

அது மட்டுமா தற்போது மார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு.


அண்மையில் கூட டெங்கு நோய் காரணமாக ஊவா மாகாணத்தில் பாடாசலை மாணவர்களுக்கு பஞ்சாப் ஆடை அணியுமாறு வலியுறுத்தப்பட்டது. அப்போது டெங்கு நுளம்பு தாக்காது என்று கூறியுள்ளனர் . திறந்த ஆடைகளை அணிவதன் மூலம் பல துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன என்றார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்