வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின், முக்கிய கவனத்திற்கு..!


பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சட்டத்தரணிகளோ அரசியல்வாதிகளோ அவசியமில்லை.

அண்மையில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்செயலில் உங்களது உடமைகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை உடனடியாக தத்தமது பிரிவு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்வதை கட்டாயம் உறுதிப்படுத்துங்கள்.

சேத விபரங்களின் உண்மையான மதிப்பீட்டை வெளிப்படுத்தி முறைப்பாட்டின் பிரதியையும் தவறாது பெற்றுக்கொள்வதுடன், முறைப்பாடு செய்த நேரம் மற்றும் திகதியுடன் முறைப்பாட்டு இலக்கத்தையும் குறித்து வையுங்கள். அரசாங்கத்தின் நஷ்டஈட்டைப் பெறுவதற்கு இது மிகவும் அவசியமாகத் தேவைப்படும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதுடன், ஜனாதிபதியும் பிரதமரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.

யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அதனையும் முறைப்பாட்டில் தெரியப்படுத்துங்கள்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக முறைப்பாடுகளைப் பதிவுசெய்யுங்கள். பள்ளிவாசல்களுக்குப் பொறுப்பானவர்கள் அவற்றையும் தனித்தனியாக முறைப்பாடு செய்யுங்கள்.

ஏற்பட்ட சேதங்களை முடியுமானவர்கள் முழுமையாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மூலமாகவும் ஆவணப்படுத்துங்கள்.

பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் மத ஸ்தலங்களை திருத்திக் கொடுப்பதில் அரச தரைப்படையினர் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்குவதோடு முடிந்தவரை உரியவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

தவறும் பட்சத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் நஷ்டஈடுகளைப் பெற முடியாதுபோகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

இதனைத் தெரியப்படுத்துவதும் பாதிக்கப்பட்ட நமது சகோரர்களுக்கு நாம் செய்யும் உதவிதான் என்பதும் கவனிக்கத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்