சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ஐ.எம். றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஏ.எம். றினோஸ், கிராம அபிவிருத்திச் சங்க பிரிதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் உரையாற்றுகையில், கடந்தவருடம் ஓகஸ்ட் மாதமளவில் நிதிகள் கிடைக்கப் பெற்றமையினால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் இவ்வருடத்திற்காக நிதி ஒதுக்கீடுகள் வருட ஆரம்பத்தில் கிடைக்கப் பெற்றுள்ளமைய